×
Saravana Stores

2,703 பயனாளிகளுக்கு ரூ.33.67 கோடி கடனுதவி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டக சாலையின் சிறு பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றை திறந்து வைத்து 2,703 பயனாளிகளுக்கு ரூ.33.67 கோடிக்கான கடனுதவி காசோலைகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடந்த 71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் வேர்கள், விழுதுகள் மற்றும் சிறகுகள் திட்டங்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், சென்னை மத்தியக் கூட்டுறவு வங்கியின் கொருக்குப்பேட்டை புதிய கிளை, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவுச் சங்கம் மற்றும் பூங்காநகர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் சிறு பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றை திறந்து வைத்து 2,703 பயனாளிகளுக்கு 33.67 கோடி ரூபாய்க்கான கடனுதவி காசோலைகளை வழங்கி பேசினார்.

விழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 5 பேருக்கு கருணை அடிப்படையில், பணி நியமன ஆணைகளையும், சிறப்பாக செயல்பட்ட சைதாப்பேட்டை நகர கூட்டுறவு வங்கி, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவுக் கடன் சங்கம், தண்டையார்பேட்டை நகர கூட்டுறவுப் பண்டகசாலை பொதுச் சேவை மையம் மற்றும் பல்லவன் போக்குவரத்துக் கழகக் கூட்டுறவு வீடு கட்டுமானச் சங்கம் ஆகியவற்றிற்கு சிறந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கான பாராட்டுக் கேடயத்தையும் வழங்கினார்.

மேலும், சென்னை மண்டலத்தில் இயங்கி வரும் கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களின் குழந்தைகளில், 2023-24ம் கல்வியாண்டில் அரசுப் பள்ளியில் பயின்று, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மணலி, அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த விஷ்ணு குமாரி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற பெரம்பூர், அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த தீபிகா ஆகியோருக்கு பரிசு தொகையாக தலா ரூ.10,000 க்கான காசோலை வழங்கினார்.

71வது அகில இந்திய கூட்டுறவு வார விழாவினையொட்டி 180 மகளிர் சுய உதவி குழுக்களுக்களை சேர்ந்த 2,160 மகளிருக்கு குழுக்கடனாக ரூ.10.92 கோடி, டாம்கோ கடனாக 36 பயனாளிகளுக்கு ரூ.13.91 லட்சம், டாப்செட்கோ கடனாக 4 பயனாளிகளுக்கு ரூ.1.75 லட்சம், மாற்றுத்திறனாளிகள் கடனாக 4 மாற்றுத்திறானாளிகளுக்கு ரூ.2 லட்சம், மகளிர் தொழில் முனைவோர் கடனாக 3 மகளிருக்கு ரூ.1.50 லட்சம், ஆதரவற்ற பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கான கடனாக 30 பயனாளிகளுக்கு ரூ.13.89 லட்சம், சிறுகுறு தொழில் கடனாக 4 பயனாளிகளுக்கு ரூ.2.50 லட்சம் ரூபாய், மாற்று பாலினத்தவர் கடனாக 13 பயனாளிகளுக்கு ரூ.6.50 லட்சம், கல்விக் கடனாக ஒரு நபருக்கு ரூ.62,000, நாட்டுப்புற கலைஞர்கள் மற்றும் கைவினைக் கலைஞர்கள் கடனாக 2 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சம், பணிபுரியும் மகளிர் கடனாக 10 மகளிருக்கு ரூ.26.30 லட்சம், ஓய்வூதியதாரர் கடனாக ஒரு நபருக்கு ரூ.65,000, சம்பள கடனாக ஒரு நபருக்கு ரூ.6 லட்சம், பணியாளர் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் கடனாக 3 சங்கங்களுக்கு ரூ.3.77 கோடி, சிறுவணிகர் கடனாக 385 சிறுவணிகர்களுக்கு ரூ.1.71 கோடி, வீடு கட்ட கடன் மற்றும் வீட்டு அடமான கடனாக 46 பயனாளிகளுக்கு ரூ.16.50 கோடி என மொத்தம் 2,703 பயனாளிகளுக்கு ரூ.33.67 கோடிக்கான கடனுதவி காசோலைகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

முன்னதாக, மகளிர் சுயஉதவி குழுக்களின் தயாரிப்பு பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்டார். விழாவில், அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர்கள் சுதர்சனம் (மாதவரம்), தாயகம் கவி (திரு.வி.க.நகர்), எஸ்.அரவிந்த் ரமேஷ் (சோழிங்கநல்லூர்), ஜோசப் சாமுவேல் (அம்பத்தூர்), வெற்றி அழகன் (வில்லிவாக்கம்), ஏ.எம்.வி.பிரபாகர ராஜா (விருகம்பாக்கம்), கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post 2,703 பயனாளிகளுக்கு ரூ.33.67 கோடி கடனுதவி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Deputy Chief Minister ,Udayanidhi Stalin ,CHENNAI ,Wholesale Trade Road ,All India ,Kalaiwanar Arena, Chennai ,Dinakaran ,
× RELATED புகழ யாரும் இல்லாத விரக்தியில்...