மும்பை: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மும்பை, ராஞ்சியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, நாம் ஒற்றுமையாக இருந்தால் பாதுகாப்பாக இருப்போம் என்று புதிய கோஷத்தை மோடியும்,பாஜவினரும் எழுப்புவதை பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் தயாராக வைத்திருந்த பாதுகாப்பு பெட்டகம் ஒன்றை காண்பித்து பதிலளிக்கையில்,‘‘ மோடி, அதானி, அமித் ஷா மற்றும் அம்பானி பாதுகாப்பாக தான் உள்ளனர். அதே நேரத்தில், மகாராஷ்டிரா மற்றும் தாராவி மக்கள் இழப்பை சந்திக்கின்றனர். மோடி, அமித் ஷா, அம்பானி மற்றும் தொழிலதிபர்கள் ஒன்றாக இருந்தால் அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்பது இதன் அர்த்தம்.
நாட்டின் முக்கிய சொத்துகளான விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் இயற்கை வளங்களை வெளிப்படையான டெண்டர்களை விடாமல் கோடீஸ்வர தொழிலதிபர்களான அதானி, அம்பானியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு முக்கியமாகும். இதன் மூலம் வளங்களை பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டு காங்கிரஸ் கட்சியால் முக்கிய முடிவுகளை எடுக்க முடியும். இந்த கணக்கெடுப்பு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானதாகும். கடந்த ஒன்றரை வருடமாக மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது. பிரதமர் மோடி ஒரு தடவை கூட அங்கு செல்லவில்லை. உள்துறை அமைச்சர் அமித் ஷா அவருடைய பணியை செய்திருக்கலாம். ஆனால் யாரும் அக்கறை எடுக்கவில்லை’’ என்றார்.
The post நாம் ஒற்றுமையாக இருந்தால் பாதுகாப்பாக இருப்போம் மோடி, அமித் ஷா, அம்பானி ஒன்றாக இருந்தால் பாதுகாப்பாக இருப்பார்கள்: பாஜவின் புதிய கோஷத்துக்கு ராகுல் காந்தி விளக்கம் appeared first on Dinakaran.