- குமாரி
- கொட்டாரு தூய சவேரியார் பெரலய விழா!
- கன்னியாகுமாரி
- கன்னியாகுமரி மாவட்டம்
- கவர்னர்
- அலகுமினா
- கொட்டாரு தூய சவேரியார் பரலாய விழா பா.
- கொட்டாரு தூய சவேரியார் பெரலய விழா!
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் அருகேயுள்ள கோட்டாறு பகுதியில் அமைந்துள்ள தூய சவேரியார் பேராலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாக விளங்குகின்றது. வரலாற்று சிறப்புகளைக் கொண்ட இந்த கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழா 10 நாட்கள் விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.திருவிழாவினை முன்னிட்டு 03.12.2024 (செவ்வாய் கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.
03.12.2024 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2024 டிசம்பர் திங்கள் இரண்டாவது சனிக்கிழமை (14.12.2024) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவிற்கு உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச் சட்டம் 1881 (Under Negotiable Instruments Act 1881) -இன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் 03.12.2024 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 3ம் தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!! appeared first on Dinakaran.