×
Saravana Stores

குமரி தக்கலை அருகே டபுள் கேம் ஆடியதாக வழக்கறிஞர் வெட்டி கொலை செய்யப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரிப்பு..!!

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே டபுள் கேம் ஆடியதாக வழக்கறிஞர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டம் திருப்பு விசாகம் பகுதியை சேர்ந்தவர் இசக்கிமுத்து . இவர் தனது வழக்கு தொடர்பாக தக்கலை பகுதியை சேர்ந்த கிரிஸ்டோபர் சுகு(50) என்பவரை நாடி தனது வழக்கை நீதிமன்றத்தில் வாதாடி தனக்கு வெற்றி பெற வைக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதற்கு ஒப்புக்கொண்ட வழக்கறிஞரும் அதற்கான தொகையை பெற்று கொண்டு வழக்கை வந்துள்ளார். இதனிடையே இந்த வழக்கின் போக்கு கடந்த சில மாதங்களாக இசக்கிமுத்து சாதகமாக செல்லவில்லை. மேலும் இது குறித்து அதிருப்தி அடைந்த இசக்கிமுத்து தனது வழக்கறிஞரான கிரிஸ்டோபர் சுகுவிடம் வழக்கு தொடர்பான நடவடிக்கை குறித்து கேட்டுள்ளார். ஆனால் வழக்கறிஞர் சரியான பதிலை கூறாமல் இருந்து வந்துள்ளார்.

இதை அடுத்து, சந்தேகமடைந்த இசக்கிமுத்து தனது வழக்கறிஞர் நடவடிக்கை குறித்து ரகசியமாக விசாரணை செய்துள்ளார். இதில் தனது வழக்கறிஞர் தனக்கு ஆதரவாக வழக்காடுவது போல் நடித்துவிட்டு தனது எதிர் தரப்பினருக்கு ஆதரவாகவும் செயல்பட்டு டபுள் கேம் விளையாடியதை இசக்கிமுத்து கண்டுபிடித்துள்ளார். இதனை தொடர்ந்து தனது ஆவணங்களை தருமாறு வழக்கறிஞரிடம் இசக்கிமுத்து கேட்டு வற்புறுத்தியுள்ளார். இது தொடர்பாக மேலும் சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இசக்கிமுத்து வீட்டிற்கு வழக்கறிஞர் வந்துள்ளார்.

அப்போது இருவரும் மது அருந்தியுள்ளனர். இந்த மது போதையில் இசக்கிமுத்துவுக்கும், வழக்கறிஞருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே கோவத்திலிருந்த இசக்கிமுத்து தனக்கு நம்பிக்கை துரோகம் செய்த வழக்கறிஞர் மீது ஆத்திரத்தில் அரிவாளை எடுத்து வழக்கறிஞர் தலை, கை, கால் என பல இடங்களில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தார். பின்னர் யாரும் அறியாத வண்ணம் வழக்கறிஞர் உடலை பீமநேரி அருகே உள்ள முன்னாள் எம்.எல்.ஏ விஜயதரணி வீட்டின் அருகே உள்ள குளத்தின் கரையோரம் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.

இதனை தொடர்ந்து தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டு நேரடியாக போலீசாரிடம் சென்று சரணடைந்துள்ளார். இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு கொலையாளியான இசக்கிமுத்துவை அழைத்து வந்த போலீசார் வழக்கறிஞரின் உடலை குளத்தின் பகுதியிலிருந்து கைப்பற்றி அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், சரணடைந்த கொலையாளி இசக்கிமுத்துவிடம் வழக்கின் பின்னணி என்ன, கொலை திட்டமிட்டு செய்யப்பட்டதா அல்லது ஆத்திரத்தில் செய்யப்பட்டதா என்பதை குறித்து குமாரி மாவட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post குமரி தக்கலை அருகே டபுள் கேம் ஆடியதாக வழக்கறிஞர் வெட்டி கொலை செய்யப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Kumari Thakala ,Kanyakumari ,Takkala ,Kanyakumari district ,Isakimuthu ,Tiruppu Visagam ,Kumari district ,
× RELATED தோவாளை மலர் சந்தையில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.1000க்கு விற்பனை..!!