×
Saravana Stores

2024-25 ஆம் ஆண்டிற்கான 9 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை செய்து நூலுரிமைத்தொகை ரூ. 90 லட்சம் வழங்கினார் அமைச்சர் சாமிநாதன்..!!

சென்னை: 2024-25 ஆம் ஆண்டிற்கான 9 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை செய்து நூலுரிமைத்தொகை ரூ. 90 லட்சத்தை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார். சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் இன்று (18.11.2024) 2024-25 ஆம் ஆண்டிற்கு 9 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை செய்து நூலுரிமைத்தொகை ரூ. 90 லட்சம் வழங்கி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அதில்,முதலமைச்சர் ஆணைக்கிணங்க, தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், இன்றைக்கு ஒன்பது தமிழறிஞர்களுக்கான நூல்களை நாட்டுடமையாக்கப்பட்டு, விருது வழங்கப்பட்டிருக்கிறது.

அதேபோல, நினைவில் வாழக்கூடிய கவிஞர்களுடைய குடும்பத்தாருக்கு அவர்களுடைய மரபுரிமை வாரிசுதாரர்களுக்கு இந்த விருதுகள் தலா 10 லட்சம் ரூபாய் வீதம் முதலமைச்சர் ஆணைக்கிணங்க வழங்கப்பட்டிருக்கிறது. அவர்களும் நீண்ட நாட்களாக இந்த விருதுகளை எதிர்ப்பார்த்திருந்தார்கள். அரசு, தங்கள் குடும்பத்தார் கவிஞர்கள் எழுதிய நூல்களை எல்லாம் நாட்டுமையாக்குவார்கள் என்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதை முதலமைச்சர் அந்த எதிர்ப்பார்ப்பை ஈடு செய்யக்கூடிய வகையில் சட்டமன்றத்தில் அறிவிப்பிற்கிணங்க இன்றைக்கு அதை நாட்டுமையாக்கப்பட்டு, அவர்களுக்கு பரிசுத் தொகை தலா 10 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டிருக்கிறது.

அந்த வகையில், அவர்கள் எல்லாம் அந்த விருதுகளை மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். மேலும், நாட்டுடமையாக்கப்பட்டிருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். தமிழ் அறிஞர்களுக்கு மரியாதை செய்கின்ற வகையிலும், மேலும் தமிழ் மொழியை செம்மைப்படுத்துகின்ற வகையிலும் முதலமைச்சர் ஆணைக்கிணங்க, இன்றைக்கு தமிழ் வளர்ச்சித் துறை அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை இந்த நேரத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே. ராஜாராமன், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந.அருள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

The post 2024-25 ஆம் ஆண்டிற்கான 9 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை செய்து நூலுரிமைத்தொகை ரூ. 90 லட்சம் வழங்கினார் அமைச்சர் சாமிநாதன்..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Saminathan ,Chennai ,Tamil Development and News Department ,Tamil Development Department ,Chennai Kalaivanar Arena ,Minister Saminathan ,
× RELATED மேட்டுப்பாளையம் அருகே விபத்தில்...