- மகாராஷ்டிரா
- மோடி
- கங்கனா
- ராகுல்
- நாக்பூர்
- பாஜக
- ராகுல் காந்தி
- பிற்பகல்
- பாலிவுட்
- ஹிமாச்சல
- கங்கனா ரன ut த்
- மகாராஷ்டிரா சட்டமன்றம்
நாக்பூர்: பிரதமர் மோடி தனது நினைவாற்றலை இழந்து வருவதாக ராகுல்காந்தி விமர்சித்த நிலையில், அதற்கு பாஜக எம்பி கங்கனா பதில் அளித்துள்ளார். பாலிவுட் நடிகையும், இமாச்சல் மாநில பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத், மகாராஷ்டிரா சட்டப் பேரவை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். நாக்பூரில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘ஒற்றுமையே நமது பலம். சிறு வயதிலிருந்தே நமக்கு ஒற்றுமையின் முக்கியத்துவம் குறித்து கற்றுக் கொடுக்கப்படுகிறது. நாம் ஒற்றுமையாக இருக்கும் வரை, அதுவே நமது பலமாகும்.
இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். எங்களது கட்சி மதச்சார்பற்ற கட்சி. பாஜக நினைத்தால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க முடியும். நாட்டை பிளவுபடுத்தும் சதி தோல்வியடைந்து வருகிறது. இந்திய பிரதமர் மோடி குறித்து உலக நாடுகள் பேசுகின்றன. உலகின் மிகவும் பிரபலமான தலைவராக உள்ளார். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர்கள் சிலர் அவரது சாதனையை கண்டு எரிச்சலடைகின்றனர். பிரதமர் மோடி ஒரு மணி நேரம் தொடர்ந்து உரையை நிகழ்த்துகிறார்.
அவர் எதையும் பார்த்து படிக்கவில்லை. ஆனால், ராகுல்காந்திக்கு ஒரு சீட்டில் எழுதி கொடுக்க வேண்டும். அவரால் ஒரு நிமிடம் கூட பேச முடியாது. அவருக்கு நினைவாற்றல் இல்லையா?’ என்றார். முன்னதாக நேற்று பேசிய ராகுல்காந்தி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை போன்று பிரதமர் மோடி தனது நினைவாற்றலை இழந்து வருவதாக கூறினார். அதற்கு பதிலளிக்கும் வகையில் ராகுல்காந்தியை கங்கனா விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post மகாராஷ்டிராவை சூழ்ந்த தலைவர்கள்; மோடி நினைவாற்றலை இழக்கிறாரா?: ராகுலின் கருத்துக்கு கங்கனா பதில் appeared first on Dinakaran.