- மோடி
- நேரு
- சென்னை
- சத்தியமூர்த்தி
- பவன்
- தமிழ்நாடு காங்கிரஸ்
- ஜனாதிபதி
- செல்வப்பெருந்தக்காய்
- காங்கிரஸ்
- கிருஷ்ணசுவாமி
- ரூபி மனோகரன்
- இளவரசன்
- தாரகாய் குத்பர்ட்
சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேருவின் 136வது பிறந்தநாள் விழாவையொட்டி அவரது உருவப்படத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. விழாவில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி, எம்எல்ஏக்கள் ரூபி மனோகரன், பிரின்ஸ், தாரகை கத்பர்ட், பொதுச்செயலாளர்கள் தளபதி எஸ்.பாஸ்கர், காண்டீபன், எஸ்.ஏ.வாசு உள்பட உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி: இந்தியாவை தனது விண்வெளிப் புரட்சி, பசுமைப் புரட்சியால் தன்னிறைவு பெற்ற நாடாக மறுசீரமைத்தவர் நேரு. ஆனால், இன்று ஆளும் பாஜக தலைவர்கள் குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி உண்மைக்கு புறம்பான செய்தியை மக்களிடம் விதைத்து வருகிறார். நேரு இல்லை என்றால் இந்த தேசம் இல்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மருத்துவர் திடீரென தாக்கப்பட்ட சம்பவத்திற்கும் சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதை சட்டம் ஒழுங்கு பிரச்னை என்று சொல்வதன் மூலம் தான் ஒரு எதிர்க்கட்சித் தலைவர் என எடப்பாடி பழனிசாமி நிரூபிக்க முயல்கிறார்.
The post நேரு பற்றி மோடி உண்மைக்கு புறம்பாக பேசி வருகிறார்: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு appeared first on Dinakaran.