- கிருஷ்ணகிரி
- Icourt
- சென்னை
- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- கே
- சென்னை உயர் நீதிமன்றம்
- ஸ்டாலின்
- போலி
- கிருஷ்ணகிரி பள்ளி சி. சி. கேம்ப்
சென்னை: பள்ளிகளில் பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்க புகார் பெட்டிகள் வைக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை வழக்கறிஞர் தகவல் தெரிவித்தார். கிருஷ்ணகிரி பள்ளியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூரிய பிரகாசம் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது பேசிய அரசு தலைமை வழக்கறிஞர் பள்ளிகளில் பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்க புகார் பெட்டிகள் வைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஆசிரியர்கள் நியமனத்தின் போது, அவர்களின் குற்றப் பின்னணி குறித்து விசாரிப்பது பற்றி விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும். உயர்நீதிமன்றத்தின் யோசனை அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது என தமிழ்நாடு அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் போலி என்.சி.சி. முகாம் குறித்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் புதிய தலைவர் அறிக்கை அளிக்க உத்தரவிட்டதுடன் அரசு தரப்பில் பதிலை தொடர்ந்து வழக்கு விசாரணையை நவம்பர் .20-க்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது.
The post கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கு; பள்ளிகளில் பாலியல் தொல்லை குறித்து புகார் பெட்டிகள் வைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் : ஐகோர்ட்டில் தலைமை வழக்கறிஞர் தகவல் appeared first on Dinakaran.