×
Saravana Stores

நிலம் கையகப்படுத்த வந்த கலெக்டர், அதிகாரிகளை தாக்கிய 55 பேர் கைது

திருமலை: தெலங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் கோடங்கல் பகுதியில் உள்ள லகாசர்லா கிராமத்தில் மருந்து தொழிற்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களை சமரசப்படுத்தி ஒப்புதல் பெற நேற்று முன்தினம் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த கூட்டத்தை கிராம மக்கள் புறக்கணித்தனர். இருப்பினும் கூட்டத்தில் பங்கேற்க கலெக்டர் பிரதீப்ஜெயின் தலைமையில் அதிகாரிகள் சென்றனர். அப்போது கிராம மக்கள் திரண்டு, கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் கலெக்டர் பிரதீப்ஜெயின் மற்றும் அதிகாரிகள், அவர்களது வாகனங்கள் மீது தாக்குதல் நடந்தது.

இந்த சம்பவத்தை கண்டித்து நேற்று அரசு ஊழியர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர். பலர் பணியை புறக்கணிப்பு செய்தனர். இதனால் தெலங்கானா மாநிலத்தில் நேற்று அரசு பணிகள் கடுமையாக பாதித்தது. அதிகாரிகள் மீதான தாக்குதல் ெதாடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக அந்த கிராமத்தை சேர்ந்த 55 பேரை கைது செய்தனர். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் துத்யாலா, கோடங்கல், பொம்ராஸ்பேட்டை ஆகிய மண்டலங்களில் இணையதள சேவை நேற்று முழுவதும் நிறுத்தப்பட்டு 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல் 2வது நாளாக இன்றும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

The post நிலம் கையகப்படுத்த வந்த கலெக்டர், அதிகாரிகளை தாக்கிய 55 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Thirumalai ,Lakacharla ,Kodangal ,Vikarabad district ,Telangana ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரு...