- AIADMK MLA
- OPS
- எடப்பாடி
- சென்னை
- அஇஅதிமுக
- ஓ. பன்னீர்செல்வம்
- எடப்பாடி பழனிசாமி
- Palaniswami
- பொதுச்செயலர்
- சட்டமன்ற உறுப்பினர்
- தின மலர்
சென்னை: அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என இரண்டு பிரிவாக செயல்பட்டு வந்தனர். கட்சியை கைப்பற்ற ஓ.பன்னீர்செல்வம் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பலரும் படிப்படியாக எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மற்றும் மாற்று கட்சியினர் ஆயிரத்துக்கும் அதிகமானோர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நேற்று தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர். இதில் முக்கியமாக ஆலந்தூர் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வெங்கட்ராமன் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
சென்னை பசுமை வழி சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அதிமுகவில் இணைந்தவர்களை அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி, சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கேபிகந்தன், எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், கோவிலம்பாக்கம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மணிமாறன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
The post அதிமுக மாஜி எம்எல்ஏ, ஓபிஎஸ் ஆதரவாளர் உள்பட 1000க்கும் மேற்பட்டோர் எடப்பாடி அணியில் இணைந்தனர் appeared first on Dinakaran.