கெபெரா: தென் ஆப்ரிக்காவுடனான 2வது டி20 போட்டியில் நேற்று முதலில் ஆடிய இந்திய அணி, 6 விக் இழப்புக்கு 124 ரன் எடுத்தது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி, 4 டி20 போட்டிகளில் மோதுகிறது. கடந்த 8ம் தேதி நடந்த முதல் போட்டியில், 202 ரன்களை குவித்த இந்தியா, 141 ரன்னுக்கு தென் ஆப்ரிக்காவை சுருட்டி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், கெபெரா நகரில் நேற்று நடந்த 2வது போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணிக்கு ஆரம்பமே சறுக்கலாக இருந்தது.
கடந்த போட்டியில் சதம் விளாசிய சஞ்சு சாம்சன், ரன் எடுக்காமல் டக்அவுட் ஆனார். மற்றொரு துவக்க வீரர் அபிஷேக் சர்மா 4, கேப்டன் சூர்ய குமார் யாதவ் 4 ரன்னில் வீழ்ந்ததால், அணியின் நிலை, 15/3 ரன்களுடன் பரிதாபமாக இருந்தது. பின் வந்த வீரர்களும் சிறப்பாக ரன் குவிக்கத் தவறினர். அதிகபட்சமாக, ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழக்காமல் 39 ரன் எடுத்தார். ஆட்ட இறுதியில் இந்தியா, 6 விக் இழப்புக்கு 124 ரன் எடுத்திருந்தது. பின், 125 ரன் வெற்றி இலக்கை நோக்கி தென் ஆப்ரிக்கா ஆட்டத்தை துவக்கியது.
The post 2வது டி20 போட்டி: இந்தியா 124 ரன் appeared first on Dinakaran.