×
Saravana Stores

தந்தையின் பணப்பலன்களை அபகரித்த தாய், அண்ணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி வாலிபர் தீக்குளிக்க முயற்சி

பெரம்பலூர், நவ.12: தந்தையின் பணப் பலன்களை தாயும், அண்ணனும் அபகரித்துக் கொண்டதால், தம்பி கலெக்டர் அலுவலகம் முன்பு, தலையில் டீசலை ஊற்றிக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நேற்று (11 ஆம் தேதி) திங்கட்கிழமை காலை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு தலைமை வகித்தார்.

இந்நிலையில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடை பெறுவதை அறிந்து நேற்று பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமம், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த செல்லையா மகன் தரன் (30) என்பவர் காலை 8:30 மணிக்கே கையில் 5 லிட்டர் ஆயில் கேனில், 2 லிட்டர் டீசலை ஊற்றி எடுத்து வந்து, கலெக்டர் அலுவலக பாதுகாப்புப் போலீசாருக்கு தெரியாமல் பூங்கா வளாகத்தில் காத்திருந்துள்ளார். குறை தீர்க்கும் கூட்டம் தொடங்கி நடந்துவந்த நிலையில், காலை 11:30 மணியளவில் திடீரென கலெக்டர் அலுவலகம் நோக்கி ஓடிவந்த தரன், தான் கையில் வைத்திருந்த கேனை திறந்து தலையில், உடலில் டீசலை ஊற்றிக் கொண்டிருந்தார். கலெக்டர் அலுவலக போர்டிகோவில் இருந்தபடி இதனைப் பார்த்துக் கொண்டிருந்த பாதுகாப்பு போலீசார் திமுதிமுவென ஓடிச்சென்று தரனை சுற்றி வளைத்துப் பிடித்து, அவர் கையில் இருந்த டீசல்கேனைப் பிடுங்கினர். பிறகு தண்ணீர் பாட்டிலை அவர் தலையில் ஊற்றி, முதலுதவி சிகிச்சைக்காக பெரம்பலூர்அரசு தலைமை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தத் தற்கொலை முயற்சி தொடர்பாக போலீசார் தரனிடம் விசாரணை செய்தபோது, டெலிபோன் செல்லையா என்றழைக்கப்படும் அவரது அப்பா செல்லையா என்பவர் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் மெக்கானிக்காக பணி புரிந்து இறந்தபிறகு கடந்த 2012ஆம் ஆண்டு செல்லையா குடும்பத்தாருக்கென பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சார்பாக ரூ 18 லட்சம் பணப்பலன் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை தரனின் அம்மா மல்லிகா, அண்ணன் செண்பக ராமன் ஆகியோர் அபகரிக்கத் திட்டமிட்டு, வாரிசுதாரர் பட்டியலில் தரன் பெயர் இடம் பெறாமல் ஏமாற்றி, வாரிசு சான்றிதழ் பெற்று செல்லையாவின் பெயரில் பெறப்பட்ட பணப்பலனை அனுபவித்துவருவதாகவும், வாரிசு அடிப்படையில் செல்லையாவின் மகனான தனக்கு தந்தையின் பணப் பலனில் பங்கு பெற்றுத் தர வலியுறுத்தி, மாவட்ட நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் விதமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.

14ம் தேதி நடக்கிறதுவழக்குப் பதிவு
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் குறை தீர்க்கும் கூட்டங்களுக்கு வருபவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா ஏற்கனவே எச்சரித்து, ஒருவர் மீது ஏற்கனவே வழக்குபதிவு செய்துள்ள நிலையில் ஸ்ரீதரன்மீதும் வழக்குப் பதிவு செய்யப் படும் என போலீஸ் வட்டா ரங்கள் தெரிவிக்கிறது.

The post தந்தையின் பணப்பலன்களை அபகரித்த தாய், அண்ணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி வாலிபர் தீக்குளிக்க முயற்சி appeared first on Dinakaran.

Tags : Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண் பயிர்கள் டிஜிட்டல் கிராப் சர்வே