×
Saravana Stores

ஒன்றிய அரசு நிதி கொடுக்காதபோதும் நலத்திட்டங்களை தீட்டி வலிமையான தலைவராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி


பெரம்பூர்: சென்னை திருவிக.நகர் மண்டலம் வார்டு 74 புதிய வாழைமாநகரில் 2022-23ம் ஆண்டு மாநகராட்சி மேயரின் மேம்பாட்டு நிதியின் கீழ் 93.25 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இறகுப் பந்து உள்விளையாட்டு அரங்கத்தையும் புதிய ஏகாங்கிபுரத்தில் ரூபாய் 40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மைய கட்டிடத்தையும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு இன்று காலை திறந்துவைத்தார். இதன்பிறகு சேகர்பாபு கூறியதாவது;

திமுக ஆட்சி பொறுப்பேற்றபிறகு நிதியின்மை என்பது ஒருபுறம் இருந்தாலும் கஜானா காலி, களஞ்சியம் காலி என்றாலும் எங்களுடைய முதலமைச்சரின் சிந்தை எப்போதும் காலியாக இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் ஒன்றிய அரசு ஜிஎஸ்டி வருவாயில் தரவேண்டிய நிதிப்பகிர்வை அளிக்காத போதிலும் வெள்ள நிவாரண நிதியை ஒதுக்காத நிலையிலும் வளர்ச்சிப் பணிகள் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் புதிது, புதிதான திட்டங்கள், தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட உறுதிமொழிகள் இவைகள் அனைத்தையும் நிறைவேற்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் வலிமைமிகு தலைவர்களில் பத்து தலைவர்களில் ஒருவராக நம்முடைய முதல்வர் திகழ்வது இப்படிப்பட்ட அருட்பணிகளுக்கு கிடைத்த நற்சான்றாக கருதுகிறோம்.

நிதியின்மை என்பது ஒருபுறம் இருந்தாலும் முதல்வர் பொறுப்பேற்றபிறகு விடியல் பயணம், மகளிர் உரிமை தொகை உள்ளிட்டவைகளுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை ஒதுக்கீடு செய்து மக்களின் வாழ்க்கையில் இன்பத்தை உண்டாக்குகின்ற முதலமைச்சராக நம்முடைய முதல்வர் உள்ளார். கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை, மதுரையில் கலைஞர் நூலகம், ஜல்லிக்கட்டு மைதானம் இது எல்லாம் திமுக ஆட்சியில் வேகமான பணிகளுக்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது.

எதிர்க்கட்சிகள் என்ற தளம் இருக்கும்பொழுது இதுபோன்ற குறைகளை சொல்லத்தான் செய்வார்கள்.ஆனால் எங்கள் பணி, மக்கள் பணி, மக்களுக்கு தேவையான மக்கள் விரும்புகின்ற தேவைகளை நிறைவேற்றி தரக்கூடிய முதன்மையான முதல்வராக நம்முடைய முதல்வர் திகழ்கிறார். மக்கள் இதனை நன்றாக அறிந்துள்ளனர். இதற்கான விடையை 2026ம் ஆண்டு இதுவரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு அரிது பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்த்துவார்கள் இவ்வாறு கூறினார்.அப்போது தாயகம் கவி எம்எல்ஏ, மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ்குமார் உள்பட பலர் இருந்தனர்.

The post ஒன்றிய அரசு நிதி கொடுக்காதபோதும் நலத்திட்டங்களை தீட்டி வலிமையான தலைவராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.

Tags : M.K.Stalin ,Union Government ,Minister ,PK Shekharbabu ,Perambur ,Municipal Corporation ,Mayor ,Vazaima Nagar ,Chennai Thiruvik Nagar Mandal 74 ,Ekangipuram ,M.K. Stalin ,
× RELATED மக்களின் மகிழ்ச்சியால் சிலர் வயிறு எரிகிறார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்