×

கரூரில் சீமான் மீது வழக்குப்பதிவு

கரூர்: கலைஞர் குறித்து அவதூறாக பேசிய புகாரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் நீதிமன்ற உத்தரவுப்படி சீமான் மீது தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யபப்ட்டுள்ளது. சீமான் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி கரூர் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் அக்.7-ல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். நீதிமன்ற உத்தரவை அடுத்து அவதூறாக பேசுதல், இழிவுபடுத்தும் நோக்கில் பேசுதல் ஆகிய பிரிவில் வழக்குப்பதிவு செய்யபப்ட்டுள்ளது.

The post கரூரில் சீமான் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Seaman ,Karur ,SEEMAN ,Danthondimalai Police Station ,Karuril ,
× RELATED வள்ளுவர் கோட்டத்தில் அனுமதியின்றி...