×

அரியலூர் மாவட்டத்தில் ரூ.1,000 கோடியில் காலணி தொழிற்சாலை அமைக்க நவ.15-ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்!!

அரியலூர் : அரியலூர் மாவட்டத்தில் ரூ.1,000 கோடியில் காலணி தொழிற்சாலை அமைக்க நவ.15-ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டை 2030ம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இலக்கினை விரைவில் அடைவதற்காக தமிழ்நாடு அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, உயர் தொழில் நுட்பம் சார்ந்த தொழில் முதலீடுகளை ஈர்த்திடுவது மட்டுமல்லாமல், பெருமளவில் வேலைவாய்ப்பு அளித்திடும் தொழில் முதலீடுகளையும் ஈர்த்திட முயற்சிகள் எடுத்து வருகிறது.

அந்த வகையில், காலணிகள் தயாரிப்பில் உலகளவில் முன்னணி நிறுவனமாக விளங்கும் தைவானைச் சேர்ந்த “டீன் ஷூஸ்”,நிறுவனம் அரியலூரில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில், காலணி உற்பத்தி ஆலையை அமைக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிகாகோ சென்றிருந்தபோது டீன் ஷூஸ் நிறுவனத்துடன் காலனி உற்பத்தி ஆலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுததானது. இதையடுத்து வரும் நவ.15-ல் அரியலூரில் காலணி தொழிற்சாலை அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.  ஜெயங்கொண்டம் அடுத்த மகிமைபுரத்தில் 130 ஏக்கர் பரப்பளவில் உள்ள சிப்காட் தொழில்வளாகத்தில் ஆலை அமைகிறது.

டீன் ஷூஸ் குழும துணை நிறுவனமான ப்ரீ டிரெண்ட் இன்டஸ்ட்ரியல் இந்தியா பிரைவேட் லிமிடெட் சார்பில் இந்த ஆலை அமைக்கப்பட உள்ளது. இந்த புதிய காலணி தொழிற்சாலை மூலம் 15,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே பீனிக்ஸ் கோதாரி நிறுவனம் காலணி தயாரிப்பு ஆலை அமைத்துள்ள நிலையில், இப்பிராந்தியம் காலணி உற்பத்திக்கென தனித்துவ முனையமாக மாறியுள்ளது.

The post அரியலூர் மாவட்டத்தில் ரூ.1,000 கோடியில் காலணி தொழிற்சாலை அமைக்க நவ.15-ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Mu. K. Stalin ,Ariyalur ,Aryalur ,Ariyalur district ,K. Stalin ,Tamil Nadu ,India ,Dinakaran ,
× RELATED அதிமுக ஆட்சியை போல் எச்சரிக்கை...