×

சென்னை விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானங்கள் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானங்கள் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தா, குவாஹாத்தி, பெங்களூரு செல்ல வேண்டிய 4 ஏர் இந்தியா விமானங்கள் நிர்வாகக் காரணங்களால் ரத்து செய்யப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த விமானங்களில் முன்பதிவு செய்து காத்திருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளகினர். விமானங்களை இயக்க போதிய விமானிகள் இல்லாததே திடீர் ரத்துக்கு காரணம் என பயணிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து மாலை 6.10 மணிக்கு குவாஹாத்தி செல்லக்கூடிய ஏர் இந்தியா விமானம், இரவு 10.40 மணிக்கு கொல்கத்த செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம், இன்று மாலை 5.35 மணிக்கு பெங்களூருவில் இருந்து சென்னை வரக்கூடிய ஏர் இந்தியா விமானம், இன்று இரவு 10.05 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து சென்னை வரக்கூடிய ஏர் இந்தியா விமானம் என 4 விமான சேவைகள் இன்று ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

The post சென்னை விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானங்கள் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி appeared first on Dinakaran.

Tags : Air India ,Chennai Airport ,Chennai ,Kolkata ,Guwahati ,Bangalore ,
× RELATED நடுவானில் இயந்திர கோளாறு கோவைக்கு...