×
Saravana Stores

விளையாடி கொண்டிருந்தபோது அரசு பள்ளி கேட் விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு

*தெலங்கானாவில் சோகம்

திருமலை : தெலங்கானாவில் விளையாடிக்கொண்டிருந்தபோது அரசு பள்ளியின் கேட் விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தெலங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டம், ​​ஹயாத் நகரில் உள்ள ஜில்லா பரிஷத் அரசு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தவர் அஜய்(6). மாணவர் அஜய் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்துள்ளார். மாலை வகுப்பு முடிந்து பள்ளியின் இரும்பு கேட்டில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக இரும்பு கேட் மாணவர் அஜய் மீது விழுந்தது. இதில் அஜய் கேட்டின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில், அரசுப் பள்ளியின் சிதிலமடைந்த கேட்டை சீரமைக்காமல் அலட்சியமாக இருந்ததுதான் சிறுவன் உயிரிழந்ததற்கு காரணம் என குற்றம்சாட்டி பள்ளி முன்பு மாணவர் அஜய் குடும்பத்தினர் மற்றும் பாஜக கவுன்சிலர் நவஜீவன் ரெட்டி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அஜய் உயிரிழப்புக்கு அரசே முழுப்பொறுப்பேற்க வேண்டும். இப்பிரச்னையில் அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல், உடனடியாக பள்ளிக்கு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி இரும்பு கதவுகளை சீரமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post விளையாடி கொண்டிருந்தபோது அரசு பள்ளி கேட் விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Government school ,Kate ,TELANGANA ,Government Inauguration ,Zilla Parishad ,Telangana State ,Ranga Reddy District ,Hayat City ,Government School Gate ,
× RELATED தெலுங்கானாவில் அரசு பள்ளியில் இரும்பு கேட் விழுந்ததில் 6 வயது சிறுவன் பலி