×

சிறைக்கைதி தாக்கப்பட்ட விவகாரம்: 11 பேர் சஸ்பெண்ட்

வேலூர்: வேலூர் மத்திய சிறையில் கைதி தாக்கப்பட்ட விவகாரத்தில் 11 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். வழக்கு தொடர்பாக 11 பேரை சிறைத் துறை டிஜிபி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மத்திய சிறை டிஐஜி ராஜலட்சுமி, கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான், ஜெயிலர் ஏற்கெனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆயுள் தண்டனை சிறைக் கைதி சிவக்குமாரை வீட்டு வேலைக்கு பயன்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிறைக் கைதி தாக்கப்பட்ட விவகாரத்தில் 14 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடைபெறுகிறது.

The post சிறைக்கைதி தாக்கப்பட்ட விவகாரம்: 11 பேர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Vellore Central ,Prison ,Prison Department TGB ,Central Prison ,DIG Rajalakshmi ,Superintendent ,Abdul Raguman ,Dinakaran ,
× RELATED உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்...