×

மனைவி, மாமியாரை வெட்டிய மேஸ்திரி கைது

தர்மபுரி, நவ.6: தர்மபுரி அருகே குடும்பத்தகராறில், மனைவி மற்றும் மாமியாரை சரமாரியாக வெட்டிய கட்டிட மேஸ்திரியை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம் இண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியண்ணன்(35). இவர், பெங்களூருவில் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வருகிறார். 12 ஆண்டுக்கு முன்பு மோகனப்பிரியா(28) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த ஒரு வருடமாக தம்பதிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், மோகனப்பிரியா அதே பகுதியில் உள்ள தாயார் பழனியம்மாள் வீட்டில் வசித்து வந்தார். தீபாவளி பண்டிகையை கொண்டாட பெங்களூருவில் இருந்து பெரியண்ணன் சொந்த ஊருக்கு வந்தார். இதையடுத்து, மோகனப்பிரியா வீட்டிற்கு சென்று, குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால், அவர் மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில், ஆத்திரமடைந்த பெரியண்ணன் அருகில் கிடந்த அரிவாளை எடுத்து மனைவி காலில் வெட்டினார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பழனியம்மாள் தடுக்க வந்தார். அவரையும் பெரியண்ணன் முதுகில் வெட்டினார். அவர்களது அலறல் சத்தம் கேட்டு, அருகிலிருந்தவர்கள் ஓடிவந்தனர். இதையடுத்து பெரியண்ணன் அங்கிருந்து தப்பியோடினார். அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய பெரியண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தபகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post மனைவி, மாமியாரை வெட்டிய மேஸ்திரி கைது appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Periyannan ,Indore ,Dharmapuri district ,Bangalore ,Mestri ,
× RELATED ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பால் புதர் மண்டி கிடக்கும் கேசர்குழி அணை