×

தமிழ்நாட்டில், FL 2 உரிமம் பெற்ற மனமகிழ் மன்றங்கள் விதிகளின் படி செயல்படுகிறதா? : நீதிபதிகள் கேள்வி

மதுரை : விதிமுறைகளை மீறி செயல்படும் மனமகிழ் மன்றங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. விதிகளை மீறி செயல்படும் மனமகிழ் மன்றங்கள் [FL2] உரிமத்தை ரத்து செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை மானகிரியைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில்,”தமிழ்நாட்டில் (FL2] உரிமம் பெற்ற பல மனமகிழ் மன்றங்கள் உறுப்பினர் அல்லாதவருக்கும் மது விற்பனை செய்யப்படுவதால், நாள் முழுவதும் செயல்படும் மதுக்கடையாக மனமகிழ் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. எனவே அவை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். விதிகளை மீறி செயல்படும் மனமகிழ் மன்றங்கள் [FL2] உரிமத்தை ரத்து செய்ய வேண்டும், “எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையின் போது நீதிபதிகள், “தமிழ்நாட்டில், FL 2 உரிமம் பெற்ற மனமகிழ் மன்றங்கள் விதிகளின் படி செயல்படுகிறதா? என்பது குறித்து மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை, பதிவுத்துறை தரப்பில் ஆய்வு செய்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடுகிறோம். மனமகிழ் மன்றங்கள் விதிகளின் படி இயங்குவதை உறுதி செய்வது அரசின் கடமை. விதி முறைகளை மீறி செயல்படும் மனமகிழ் மன்றங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வழக்கு டிசம்பர் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது,”இவ்வாறு உத்தரவு பிறப்பித்தனர்.

The post தமிழ்நாட்டில், FL 2 உரிமம் பெற்ற மனமகிழ் மன்றங்கள் விதிகளின் படி செயல்படுகிறதா? : நீதிபதிகள் கேள்வி appeared first on Dinakaran.

Tags : TAMIL NADU, FL ,Madurai ,Icourt Madurai Branch ,Manamakhi Forums ,Madurai Managiri ,Manamakih Forums ,Dinakaran ,
× RELATED கட்சி கொடி மரங்களை ஏன் அகற்ற கூடாது?: ஐகோர்ட் கிளை கேள்வி