வாஷிங்டன்: அமெரிக்காவில் 4 நாட்களுக்கு முன்பு அணில் ஒன்று கருணை கொலை செய்யப்பட்ட விவகாரம் அந்த நாட்டு அதிபர் தேர்தலிலேயே தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு மாறியுள்ளது. உலகமே உற்றுநோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்த சூழலில் அந்த நாட்டு பெரும்பாலான வாக்காளர்களின் சமூக வலைதள பக்கங்கள் பீனட் என்ற அணிலை பற்றிய செய்திகளால் நிரம்பி வழிகின்றன.
நியூயார்க் நகரை சேர்ந்த லோனோ என்பவர் வளர்த்து வந்த 7 வயதான பீனட் என்ற அணிலை இன்ஸ்டாகிராமில் 5 லட்சத்து 34 ஆயிரம் பேர் பின்தொடர்ந்து வந்தனர். இந்த அணில் செய்யும் சேட்டைகள் துறுதுறுவென அணில் செய்யும் குறும்பு தனங்களை வீடியோ எடுத்து அதனை வளர்த்தவரான லோங்கோ இன்ஸ்டாகிராமில் பதிவிறக்கம் செய்துவந்தார்.
இந்த நிலையில் அனுமதியின்றி அணிலை வளர்த்ததாக அதனை பறிமுதல் செய்த சுற்றுசூழல் பாதுகாப்பு அதிகாரிகள் அதற்கு ரேபிஸ் வைரஸ் தொற்று இருப்பதை கண்டறிந்தனர். அதனை தொடர்ந்து அணிலை கருணை கொலை செய்ததால் பல லட்சம் பேர் கொதித்தெழுந்துள்ளனர். எலான் மஸ்க் போன்றவர்கள் இதனை டிரம்புக்கான வாய்ப்பாகவும் பயன்படுத்த முயன்று வருகின்றன.
அமெரிக்காவில் எங்கு பார்த்தாலும் அணிலுக்கு நீதி வேண்டும் என்ற முழக்கத்தையே கேட்கமுடிகிறது.அணிலை காட்டுக்குள் விடாமல் கொலை செய்வதா என்று கேட்டு தொலைக்காட்சிகளில் விவாதங்களும் நடைபெறுகின்றன. செல்ல பிராணிகளை காக்க டிரம்ப்பால் தான் முடியும் என்று அமெரிக்க வலதுசாரிகள் பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளதால் கமலா ஹாரிஸுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த அணில்.
The post ரேபிஸ் தொற்றால் 4 நாள்களுக்கு முன்பு அணில் கருணைக்கொலை: அரசுக்கெதிராக பிரசாரம் செய்யும் வலதுசாரிகள் appeared first on Dinakaran.