×

மூடா வழக்கில் நாளை விசாரணைக்கு ஆஜராக சித்தராமையாவுக்கு லோக்ஆயுக்தா சம்மன்


பெங்களூரு: மைசூரு நகர வளர்ச்சி கழகமான மூடாவில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதி 14 வீட்டுமனைகள் பெற்றார். விதிகள் மீறி வீட்டுமனைகள் ஒதுக்கியதாக பாஜ குற்றம்சாட்டியது. முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடர்வதற்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட்அனுமதி அளித்தார். இதைத்தொடர்ந்து லோக் ஆயுக்தா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மூடா நில முறைகேடு வழக்கில் முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதி, தேவராஜ் உள்ளிட்டோரிடம் லோக் ஆயுக்தா போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் முதல்வர் சித்தராமையா, மைசூருவிலுள்ள மூடா அலுவலகத்திற்கு நாளை (6ம்தேதி) காலை 10 மணிக்கு விசாரணைக்கு வரவேண்டும் என நோட்டீஸ் அளித்துள்ளனர். லோக் ஆயுக்தா அளித்த நோட்டீஸ் தொடர்பாக முதல்வர் சித்தராமையாவிடம் நிருபர்கள் கேள்வி கேட்ட போது, விசாரணைக்கு ஆஜராவேன் என பதில் அளித்தார்.

The post மூடா வழக்கில் நாளை விசாரணைக்கு ஆஜராக சித்தராமையாவுக்கு லோக்ஆயுக்தா சம்மன் appeared first on Dinakaran.

Tags : Lokayukta ,Siddaramaiah ,Muda ,Bengaluru ,Karnataka ,Chief Minister ,Parvathi ,Mysuru City Development Corporation ,BJP ,Governor ,Thavarchand Gehlot ,Siddaramaiah.… ,Dinakaran ,
× RELATED டாக்டர் அம்பேத்கர்...