×

மேல்மருவத்தூர் அருகே பைக் மீது கார் மோதி விபத்தில் 2 பெண் காவலர்கள் உயிரிழப்பு!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே பைக் மீது கார் மோதி விபத்தில் 2 பெண் காவலர்கள் உயிரிழந்தனர். பைக் ஓட்டி சென்ற காவல் உதவி ஆய்வாளர் ஜெய்ஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த பெண் காவலர் நித்தியா செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post மேல்மருவத்தூர் அருகே பைக் மீது கார் மோதி விபத்தில் 2 பெண் காவலர்கள் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Melmaruvathur ,Chengalpattu ,Chengalpattu district ,Assistant Police Inspector ,Jaishree ,Nithiya Chengalpattu ,Dinakaran ,
× RELATED ஒரு பீர்பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.20 ;...