×

ஓய்வு பெறும் நாளிலேயே உள்ளாட்சிப் பணியாளர்களுக்கு பலன்களை வழங்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட டிவிட்டர் பதிவு: தமிழ்நாட்டில் உள்ள பல உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு 7 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஓய்வூதியப் பலன்கள் வழங்கப்படவில்லை என்பதும், இதுதொடர்பான உள்ளாட்சி அமைப்புகளின் அணுகுமுறையை சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது என்பதும் அதிர்ச்சியளிக்கிறது. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் என பெரும்பான்மையான உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு ஓய்வுகால பலன்கள் பாக்கி வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட எந்த அமைப்பிலும் ஓய்வுபெற்றவர்களுக்கு ஓய்வுக்கால பலன்களை வழங்கும் அளவுக்கு நிதி இல்லை. தமிழ்நாட்டில் பொதுத்துறை, உள்ளாட்சி அமைப்புகள், அரசுத்துறை அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களில் எத்தனை பேருக்கு, எவ்வளவு கோடி அளவுக்கு ஓய்வுக்கால பலன்கள் வழங்க வேண்டியுள்ளது, அவை எப்போது வழங்கப்படும்? என்பன குறித்த விவரங்களை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.

எனவே, அரசுத்துறைகள், பொதுத்துறைகள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் பணியாற்றி ஓய்வுபெறும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் அவர்கள் ஓய்வு பெறும் நாளிலேயே ஓய்வுக்கால பயன்களை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

The post ஓய்வு பெறும் நாளிலேயே உள்ளாட்சிப் பணியாளர்களுக்கு பலன்களை வழங்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Ramadoss ,CHENNAI ,Twitter ,PAMAK ,Ramadas ,Madras High Court ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED 1980ல் ராமதாஸ் செய்த சத்தியம் சத்தியமாக...