×

தென் மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்வு

சென்னை: தென் மாவட்டங்களில் மழை பெய்து வருவதாலும், வரத்து குறைவாலும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சில காய்கறிகளின் விலை உயர்ந்து காணப்பட்டது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் தமிழகம் உள்ளிட்ட பகுதியிலிருந்து அனைத்து வகையான காய்கறிகளும் இங்கு விற்பனைக்காக வருகின்றன. இந்நிலையில், தென் மாவட்டங்களில் மழை பெய்து வருவதாலும் வரத்து குறைவாலும் நேற்று காலை சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 550 வாகனங்களில் 5,000 டன் குறைவான காய்கறிகளே வந்தன. இதனால் சில காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.

ஒரு கிலோ கேரட் ரூ.90க்கும், முள்ளங்கி ரூ.70க்கும், கத்திரிக்காய் காராமணி, முருக்கைகாய். பீர்க்கங்காய் நூக்கல், சேப்பங்கிழங்கு ரூ.50க்கும், கொத்தவரங்காய் ரூ.60க்கும். பச்சை மிளகாய் ரூ.80க்கும், சேனைக்கிழங்கு ரூ.66க்கும், இஞ்சி ரூ.180க்கும், பூண்டு ரூ.380க்கும், எலுமிச்சை ரூ.90க்கும், வெங்காயம் ரூ.60க்கும், உருளை ரூ.60க்கும், சின்ன வெங்காயம் ரூ.70க்கும், பீன்ஸ் ரூ.60க்கும், பீட்ரூட் ரூ.35க்கும், முட்டைகோஸ் ரூ.30க்கும், வெண்டைக்காய் ரூ.15க்கும், பாவக்காய் சுரக்காய் ரூ.40க்கும், புடலங்காய் ரூ.15க்கும், அவரைக்காய் ரூ.30க்கும், கோவைக்காய் ரூ.25க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

The post தென் மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்வு appeared first on Dinakaran.

Tags : Koyambedu market ,CHENNAI ,Karnataka ,Kerala ,Maharashtra ,Andhra Pradesh ,Tamil Nadu ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட் பகுதி...