- இந்தியா-கனடா உறவுகள் தொடர்பான நாடாளுமன்ற
- மாநில செயலாளர்
- புது தில்லி
- முந்தைய நாடாளுமன்ற குழு
- இந்தியா
- கனடா
- இந்தியன்
- கலிஸ்தான்
- ஹர்ஜீத் சிங் நிஜ்ஜார்
- இந்தியா-கனடா உறவுகள் பிரச்சினைகள் நாடாளுமன்ற
- 6வது
- தின மலர்
- வெளிவிவகாரம்
- ஆஜர்
புதுடெல்லி: இந்தியா – கனடா இடையிலான உறவு சிக்கலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குழு முன்பு வரும் 6ம் தேதி வெளியுறவுத்துறை செயலர் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார். காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதி ஹர்ஜீத் சிங் நிஜ்ஜரை கொலை செய்ய இந்திய அரசு அதிகாரிகள் உத்தரவிட்டதாக கனடா அதிகாரிகள் குற்றம் சாட்டியதை அடுத்து, இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
நிஜ்ஜார் கொலையில் இந்திய உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவுகள் மேலும் மோசமடைந்துள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகளை இந்தியா நிராகரித்துள்ளது. கனடாவின் துணை வெளியுறவு அமைச்சர் டேவிட் மாரிசன் செவ்வாயன்று, கனடாவிற்குள் சீக்கிய பிரிவினைவாதிகளை குறிவைத்து வன்முறை, மிரட்டல் மற்றும் உளவுத்துறை சேகரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகளை இந்தியா ‘அபத்தமானது, ஆதாரமற்றது’ என்று கூறியுள்ளது. இந்நிலையில் ஒன்றிய வெளியுறவு அமைச்சகத்தின் மானியக் கோரிக்கைகளை ஆய்வு செய்து வரும் முன்னாள் ஒன்றிய அமைச்சர் சசி தரூர் தலைமையிலான வெளியுறவுத் துறைக்கான நாடாளுமன்றக் குழு முன்பாக, இந்தியா-கனடா உறவுகள் குறித்து வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி வரும் புதன்கிழமை (நவ. 6) ஆஜராகி விளக்கம் அளிக்கவுள்ளார். அப்போது கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்ஏசி) ரோந்து பணியை மீண்டும் தொடங்க ஒப்பந்தம் குறித்தும், சீனாவுடனான இந்தியாவின் உறவுகளில் சமீபத்திய முன்னேற்றம் குறித்தும் நாடாளுமன்றக் குழுவிடம் அவர் தெரிவிக்கலாம் என்று கூறப்படுகிறது.
The post இந்தியா – கனடா இடையிலான உறவு சிக்கல் நாடாளுமன்ற குழு முன்பு 6ம் தேதி வெளியுறவுத்துறை செயலர் ஆஜர்: சீன எல்லை பிரச்னை குறித்தும் விளக்கம் appeared first on Dinakaran.