×

மேட்டுப்பாளையத்தில் மின்கம்பங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கோவை: மேட்டுப்பாளையத்தில் பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக மின்கம்பங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறுமுகை செல்லும் சாலையில் சங்கர் நகர் என்ற இடத்தில் 3 மின்கம்பங்கள் சாய்ந்தன. மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிப்பு; மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் மின்வாரிய ஊழியர்கள், சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

The post மேட்டுப்பாளையத்தில் மின்கம்பங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Mettupalayam ,Coimbatore ,Sirumugai ,Shankar Nagar ,Dinakaran ,
× RELATED மேட்டுப்பாளையம், சிறுமுகை வனத்தில்...