×

அரசியல் கட்சிகளுக்கு வகுத்து கொடுத்த தேர்தல் வியூகம் மூலம் ரூ100 கோடி கிடைச்சது: பிரசாந்த் கிஷோர் பேச்சு


பாட்னா: அரசியல் கட்சிகளுக்கு வகுத்து கொடுத்த தேர்தல் வியூகம் மூலம் ரூ100 கோடி வரை கட்டணம் பெற்றதாக பிரசாந்த் கிஷோர் கூறினார். பீகாரை சேர்ந்த ஜன் சுராஜ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் தேர்தல் வியூகவாதியுமான பிரசாந்த் கிஷோரின் கட்சியின் சார்பில் பீகாரில் 4 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. அதையடுத்து பெலகஞ்சில் நடந்த இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது பிரசாந்த் கிஷோர் பேசுகையில், ‘நான் தேர்தல் தொடர்பான வியூகம் அல்லது ஆலோசனைகளை அரசியல் கட்சிகள் அல்லது தலைவர்களுக்கு வழங்கினால் அதற்காக பணம் ெபறுவேன்.

ஒரு தேர்தலுக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலித்துள்ளேன். எனது ஆலோசனை மற்றும் வியூகங்களின் அடிப்படையில் பத்து மாநிலங்களில் ஆட்சி நடக்கிறது. அதேபோல் தொடர்ந்து கட்சிகளுக்கு ஆலோசனை வழங்கிக் கொண்டிருந்தால் எங்களுக்கு பணம் கிடைக்கும். ஒரே ஒரு கட்சிக்கு தேர்தல் ஆலோசனைகளை வழங்கினால் கூட, எனக்கு ஒரே நாளில் பணம் சேர்ந்துவிடும். ஆனால் பீகாரில் கடந்த 2 ஆண்டுகளாக எங்களது கட்சிக்காக தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறோம்’ என்றார்.

The post அரசியல் கட்சிகளுக்கு வகுத்து கொடுத்த தேர்தல் வியூகம் மூலம் ரூ100 கோடி கிடைச்சது: பிரசாந்த் கிஷோர் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Prashant Kishore ,Patna ,Bihar ,Prashant Kishor ,Jan Suraj ,
× RELATED பாட்னாவில் 16 வயது சிறுவன் சுட்டு கொலை