×

நீண்ட வெண் தாடி நடிகருடனான மணக்கோல வீடியோ வைரல்; ‘செக்ஸ்’ இல்லாமல் வாழவே முடியாதா?.. 2வது திருமணம் செய்து கொண்ட நடிகை ஆவேசம்

புதுடெல்லி: நீண்ட வெண் தாடி நடிகருடனான மணக்கோல வீடியோ வைரலாகி வரும் நிலையில், ‘செக்ஸ்’ இல்லாமல் வாழவே முடியாதா? என்று 2வது திருமணம் செய்து கொண்ட நடிகை ஆவேசமாக கேட்டுள்ளார். மலையாள சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர் கிறிஸ் வேணுகோபால் மற்றும் நடிகை திவ்யா ஸ்ரீதர் ஆகியோர் சமீபத்தில் ரகசிய திருமணம் செய்துகொண்டனர். இருவரும் சினிமாக்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளனர். அதேபோல் டி.வி தொடரில் ஒன்றாக நடித்துள்ளனர். இதன்மூலம் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு காதலித்து வந்தனர். ெதாடர்ந்து நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் வைத்துத் திருமணம் செய்துகொண்டனர். திவ்யா ஸ்ரீதருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அந்த இரண்டு பிள்ளைகளும் இந்தத் திருமணத்தில் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் நீண்ட வெண் தாடியுடன் கிறிஸ் வேணுகோபால் மணமேடையில் திவ்யா ஸ்ரீதருக்கு தாலிகட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து அவர்களின் வயது உள்ளிட்ட விஷயங்களைக்கூறி கிண்டலாக சமூக வலைதளங்களில் சிலர் கருத்துக்களை பதிவிட்டிருந்தனர். இதுகுறித்து நடிகை திவ்யா ஸ்ரீதர் கூறுகையில், ‘நான்கு பேருக்கு அறிவித்துத் திருமணம் செய்ய வேண்டும் என ஆசைப்பட்டோம். ஆனால், பலரது கமென்ட்டுகள் பாசிட்டிவானதாக இல்லை. திருமணம் செய்வது அவ்வளவு பெரிய தவறான செயலா? நம் வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு பிரச்னைகளையும் கருத்தில்கொண்டு இரண்டாவது திருமணத்திற்கு முடிவு செய்துள்ளோம். நல்ல கமென்ட்டுகள் வரும் என எதிர்பார்த்தோம். ஆனால் இவ்வளவு மோசமான கமென்ட்டுகள் வரும் என்று நினைத்துப் பார்க்கவில்லை. நாங்கள் திருமணம்செய்தது செக்ஸுக்காக அல்ல.

என் பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும். அவர்களுக்கு ஒரு தந்தை வேண்டும். என் கணவர் எனக் கூறுவதற்கு எனக்கு ஓர் அடையாளம் வேண்டும். வாழ்க்கை என்பது செக்ஸ் மட்டும்தான் என எங்காவது எழுதி வைத்திருக்கிறார்களா?. செக்ஸ் இல்லாமல் வாழவே முடியாதா? வாழ்க்கையின் ஒரு பகுதி தான் செக்ஸ். 60 வயது ஆனவர் 40 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்டதாக வலைதளங்களில் பதிவிடுகிறார்கள். அவருக்கு 49 வயதும், எனக்கு 40 வயதும் ஆகிறது. அவர் 1975ம் ஆண்டும், நான் 1984ம் ஆண்டும் பிறந்தோம். இனி எங்கள் வயதைப்பற்றி தவறாகப் பேசுபவர்கள் பேசிக்கொள்ளட்டும்.

அறுபது வயது ஆனவருடன் நாற்பதோ, ஐம்பதோ வயதுள்ள நான் சேர்ந்து வசிப்பதில் என்ன பிரச்னை இருக்கிறது. அறுபதோ, எழுபதோ வயது உள்ளவர்கள் திருமணம் செய்துகொள்ளக்கூடாதா?. ஆயிரம் குடங்களின் வாயை அடைக்க முடியும் ஆனால், ஒரு மனிதனின் வாயை அடைக்க முடியாது. நமது சமூகம் இப்படித்தான்; அதனால் தான் நாடு உருப்படி ஆகாமல் உள்ளது’ என்று கடுப்புடன் கூறினார்.

The post நீண்ட வெண் தாடி நடிகருடனான மணக்கோல வீடியோ வைரல்; ‘செக்ஸ்’ இல்லாமல் வாழவே முடியாதா?.. 2வது திருமணம் செய்து கொண்ட நடிகை ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,MALAYALAN CINEMA ,CINNATHRA ,CHRIS VENUGOPAL ,
× RELATED டிரோன் எதிர்ப்பு வெடிபொருள் தயாரிக்க விண்ணப்பம் வரவேற்பு