- படேல்
- திருவள்ளூர்
- சர்தர்வல்லபாய் படேல்
- திருவல்லூர் மாவட்ட கலெக்டர்
- அலுவலக வளாகம்
- தேசிய ஒருமைப்பாடு நாள்
- பிரபுஷங்கர்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சர்தார்வல்லபாய் பட்டேல் பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமையில் தேசிய ஒருமைப்பாடு நாள் உறுதி மொழியினை ஊழியர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். அப்போது அவர்கள், இந்திய நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பையும் பெறுவதற்கு என்னையே உவந்தளிப்பேன்.
இந்த நல்லியல்புகனை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன். சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்கு பார்வையாலும் நடவடிக்கைகளாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினைப் பேண நான் இந்த உறுதி மொழியை ஏற்கிறேன். எனது நாட்டின் உன் பாதுகாப்பினை உறுதிசெய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் உளமாற உறுதி அளிக்கிறேன்’ என்று ஏற்றுக் கொண்டனர்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வெங்கட்ராமன் (பொது) சத்யபிரசாத் (தேர்தல்), தனி துணை கலெக்டர் (சபாதி) கணேசன் மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் செல்வராணி, மாவட்ட கலெக்டரின் மேலாளர்கள் புகழேந்தி (பொது) செல்வம் கலந்துகொண்டனர்.
The post படேல் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய ஒருமைப்பாடு உறுதி மொழி ஏற்பு appeared first on Dinakaran.