×

தொட்டதெல்லாம் வெற்றியாக்குவாள் தொட்ட கட்டவல்லி மகாலட்சுமி

தொட்டதெல்லாம் வெற்றியாக்குவாள் தொட்ட கட்டவல்லி மகாலட்சுமி

மைசூருக்கு அருகேயுள்ள ஹாஸன் பகுதிக்கு 23 கி.மீ தொலைவில் உள்ள ஊர் தொட்ட கட்டவல்லி. இங்கு இருக்கும் மகாலட்சுமியின் ஆலயத்தில் சரஸ்வதிக்கும் ஒரு சந்நதி யுள்ளது. சிவனும், விஷ்ணுவும் எதிர்எதிராக கோயில்கொண்டுள்ளனர். மிகவும் அழகான உருவம். நான்கு கைகளில் சங்கு, சக்கரம், கதை, தாமரை வைத்திருக்கிறாள். இம்மாதிரி கோலத்தில் வேறு எங்கேயுமே மகாலட்சுமி கிடையாது.

யோக வாழ்வளிப்பார் மகாலட்சுமீஸ்வரர்

திருமாலின் திருமார்பினில் நீங்காதிருக்கும் வரம் வேண்டி அலைமகளாம் லட்சுமிதேவி இங்கு ஈசனைப் பூஜித்து பேறு பெற்றதாக தல புராணம் கூறுகிறது. கருவறைக்குள் கருணையோடு மகாலட்சுமீஸ்வரர் என்கிற திருப்பெயரோடு, ருத்ராட்சப் பந்தலின் கீழ் அருள்பாலிக்கிறார். அனுஷ நட்சத்திரக்காரர்கள் வழிபட உகந்த தலம் இது. ஏனெனில், அனுஷத்திற்கு அதிதேவதையே மகாலட்சுமிதான். செல்வச் செழிப்பு உண்டாக லட்சுமி ஹோமம் நடத்தப்படுகின்றது. தாமரை இதழில் தேனூற்றி ஹோம அக்னியில் இட்டு யாகங்கள் செய்யப்படுகின்றன. மயிலாடுதுறையிலிருந்து 7 கி.மீ.
தொலைவில் இத்தலம் உள்ளது.

மாசற்ற வாழ்வு தருவாள் மாமாகுடி ஸ்ரீ மகாலட்சுமி

ஸ்ரீ மகாலட்சுமி அவதரித்த தலமாக இதைத்தான் குறிப்பிடுகின்றனர். திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திற்கு வடக்கிலும், ஆக்கூருக்கு அருகேயும் இத்தலம் அமைந்துள்ளது. ஆதிகாலத்தில் இத்தலத்தை லட்சுமிபுரம், திருமால்மாகுடி என்றெல்லாம் அழைத்தனர். மிகவும் அரிய ஆலயமாக இருப்பதால் யாருக்கும் தெரியாமல் இருக்கிறது.

அழகான ரூபம் தருவாள் அரூப லட்சுமி

காஞ்சி காமாட்சி கோயிலில் அரூப லட்சுமியை தரிசிக்கலாம். மகாலட்சுமிக்கு தான் மிகவும் அழகுடையவள் என்ற கர்வம் ஏற்பட்டதாம். ஒருநாள் தன் கணவர் மகாவிஷ்ணு அழகையே பரிகசிக்க, அவர் சாபமிடுகிறார். அந்தச் சாபம் நீங்க காமகோட்டத்தை அடைந்து தேவியை நோக்கித் தவம் புரிகிறாள். காமாட்சியின் குங்குமம் நிர்மால்ய பிரசாத ஸ்பரிசத்தால்தான் சுயரூபம் பெற்றாள்.

அரசர்கோயில் சுந்தரமகாலட்சுமி

செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள அரசர்கோயில் எனும் இடத்தில் ஆலயம் கொண்டுள்ள சுந்தரமகாலட்சுமியின் வலது பாதத்தில் ஆறு விரல்கள் இருப்பது குறிப்பிடத்தக்க அதிசயம். ஒரு முறை ஜனக மகாராஜாவும், பெருமாளும் இத்தலத்தில் சேர்ந்திருக்க நேரிட்டதால் இத்தலம் அரசர்கோயில் என்றானதாம். கற்பூர ஆரத்தி காட்டி, தாயாரின் வலது பாதத்தை தரிசிக்கும் வாய்ப்பை வழங்குகிறார் பட்டர். இடது கரத்துக்குக் கீழே பத்மாசனமாக மடித்து வைத்த நிலையில் இருக்கிறது வலது பாதம். அதில் சுண்டு விரலை அடுத்து அழகான ஆறாவது விரல். இந்த ஆறுவிரல்கள் உள்ள பாதத்தை தரிசிப்பவர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி அள்ளித் தருகிறாள் மகாலட்சுமி என்பது ஐதீகம். அன்னைக்குப் பலாச் சுளைகளால் அபிஷேகம் செய்து பின் அவற்றை பக்தர்களுக்குப் பிரசாதமாக தருகிறார்கள். செங்கல்பட்டு மதுராந்தகம் பாதையில் படாளம் கூட்டு ரோட்டிலிருந்து இடது பக்கம் செல்லும் சாலையில் 6 கி.மீ தொலைவில் உள்ளது அரசர்கோயில்.

The post தொட்டதெல்லாம் வெற்றியாக்குவாள் தொட்ட கட்டவல்லி மகாலட்சுமி appeared first on Dinakaran.

Tags : Mahalakshmi ,Kattavalli ,Hassan ,Mysore ,Saraswati ,Shiva ,Vishnu ,Kattavalli Mahalakshmi ,
× RELATED ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை