- தமிழ்நாடு அரசு
- ஸ்ரீம்பர்பாகம் வாயு
- சென்னை
- ஸ்ரீம்பர்பாகம் லகூன்
- மிக்ஜம் புயல்
- செர்ரம்பாகம் ஏரி
- ஸ்ரீம்புர்பாகம்
சென்னை: மிக்ஜாம் புயலில் சேதமடைந்த செம்பரம்பாக்கம் ஏரிக்கரையை ரூ.22 கோடியில் சீரமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் முக்கிய குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. 6,300 ஏக்கர் பரப்பளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 3,645 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும்.
சென்னை நகரில் மக்கள் பெருக்கமும், அதற்கேற்றாற்போல் குடிநீர் தேவையும் அதிகரித்து வருகிறது. சென்னை நகரின் குடிநீர் தேவை, பருவ மழைக்காலங்களில் பெறப்படும் மழைநீர், வீராணம் ஏரி மற்றும் கிருஷ்ணா நதி நீர் ஆகியவைகளிலிருந்து பெறப்பட்டு, சென்னையைச் சுற்றியுள்ள பூண்டி, செங்குன்றம், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய ஏரிகளில் சேமித்து வைக்கப்பட்டு, மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
வங்கக் கடலில் உருவான ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த 3, 4-ம் தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதனால், பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில் மிக்ஜாம் புயலில் சேதமடைந்த செம்பரம்பாக்கம் ஏரிக்கரையை ரூ.22 கோடியில் சீரமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. எரிக்கரையை சீரமைப்பதன் மூலம் தண்ணீர் ஊருக்குள் வராமல் தடுக்க முடியும்.
The post செம்பரம்பாக்கம் ஏரிக்கரையை சீரமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை appeared first on Dinakaran.