- கரம்பாக்குடி
- பிரபாகரன்
- திட்டணிப்பட்டி கிராமம்
- புதுக்கோட்டை மாவட்டம்
- இளையராஜா
- மஞ்சன் விடுதி
- ஆலங்குடி
- தின மலர்
கறம்பக்குடி,அக்.29: புதுக்கோட்டை மாவட்ட கறம்பக்குடி காவல்நிலையத்தில் இரண்டாம் நிலை காவலர்களாக பணி புரிபவர்கள் கறம்பக்குடி அருகே தீத்தானிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (35). ஆலங்குடி அருகே உள்ள மாஞ்சான் விடுதி கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா (37). இவர்கள் 2 பேரும் கறம்பக்குடி காவல்நிலையத்தில் 2ம் நிலை காவலர்களாக பணி புரிந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் அம்புக்கோவில் கிராமத்தில் ஒரு வழக்கு சம்மந்தமாக விசாரணைக்காக கறம்பக்குடியில் இருந்து பைக்கில் சென்றனர்.
கறம்பக்குடி பிலாவிடுதி மேல தெரு விளக்கு சாலையில் சென்றபோது நாய் ஒன்று சாலையின் குறுக்கே வந்தது. இதில் பைக் அவர்கள் கட்டுபாட்டை இழந்து நாய் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதனால் அவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். காவலர் பிரபாகரன் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காவலர் இளையாஜா புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து கறம்பக்குடி எஸ்ஐ மாதேஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
The post பைக்கில் இருந்து கீழே விழுந்த 2 காவலர்கள் படுகாயம் appeared first on Dinakaran.