×
Saravana Stores

புதுவை கடற்கரைக்கு உலகிலேயே 2ம் இடம்

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் சுற்றுலா தளத்தில் சிறந்து விளங்குவதால் தினமும் வெளிநாடு, ெவளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். புதுவை சுற்றுலா தளத்தில் ராக் கடற்கரை முதலிடத்தில் உள்ளது. இதனால் புத்தாண்டு ெகாண்டாடத்தில் சுற்றுலா பயணிகள் தேடும் முதல் மாநிலமாக புதுவை உள்ளது. இந்நிலையில் லோன்லி பிளானட், 2025ம் ஆண்டிற்கான சிறந்த பயண இடங்களை வெளியிட்டுள்ளது.

லோன்லி பிளானட்டின் பயண வழிகாட்டியில் 30 பிரபலமான இடங்கள், நகரங்கள், நாடுகள் மற்றும் பிராந்தியங்களை சுற்றுலா பயணிகள் புத்தாண்டில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களை குறிப்பிட்டுள்ளது. அதன்படி சிறந்த நகரங்கள் பட்டியலில், பிரான்ஸ் நாட்டின் துலூஸின் கால்வாய் கரைகள் முதல் இடத்தை பிடித்துள்ளது. அடுத்தபடியாக இந்தியாவில் புதுச்சேரி கடற்கரை 2ம் இடத்தை பிடித்துள்ளது. பல்கேரியாவின் பான்ஸ்கோ 3ம் இடம் பிடித்துள்ளது.

சிறந்த நாடுகளின் பட்டியலில் அழகிய கடற்கரைகள், உற்சாகமான இரவு வாழ்க்கை மற்றும் அமைதியான தேசிய பூங்காக்களுக்காக கேமரூன் முதல் இடம் பிடித்து உள்ளது. வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் பாதுகாக்கப்பட்ட கடல் பகுதிகளுக்காக லிதுவேனியா மற்றும் பிஜி, முறையே 2வது மற்றும் 3வது இடத்தை பிடித்துள்ளன. சிறந்த பிராந்தியங்களுக்கு, அமெரிக்காவின் தென் கரோலினாவின் லோகன்ட்ரி மற்றும் கடலோர ஜார்ஜியா முதலிடத்தை பிடித்துள்ளது. புத்தர் பிறந்த இடமான நேபாளத்தின் தெராய் பகுதி 2வது இடம் பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா 3வது இடம் பிடித்துள்ளது.

The post புதுவை கடற்கரைக்கு உலகிலேயே 2ம் இடம் appeared first on Dinakaran.

Tags : Puduwa Beach ,Puducherry ,Evali ,Rock Beach ,New Year's Eve ,Dekhandad ,New Beach ,
× RELATED தீபாவளியை ஒட்டி கட்டட...