×
Saravana Stores

பீட்ரூட் சட்னி

தேவையான பொருட்கள்:

பீட்ரூட் – 2
பச்சை மிளகாய் – 3
சீரகம் – ¼
புதினா – 1 கைப்பிடி
கொத்தமல்லி இலை – 1 ½ கைப்பிடி
எலுமிச்சை – ½ மூடி
தேங்காய் – ½ மூடி
பூண்டு – 2 பல்
இஞ்சி – 1 இன்ச் அளவு
உப்பு – தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய் – தேவையான அளவு
கடுகு – ¼ டீ ஸ்பூன்
கடலைப்பருப்பு – ½ டீ ஸ்பூன்
உளுந்தம்பருப்பு – ½ டீ ஸ்பூன்
கருவேப்பிலை – சிறிதளவு
பெருங்காயம் – சிறிதளவு

செய்முறை:

பீட்ரூட்டை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளை சுத்தம் செய்து தண்ணீரில் கழுவி எடுத்து ஈரத்தை உலரவிடவும்.பூண்டு மற்றும் இஞ்சியின் தோல் நீக்கி வைக்கவும்.தேங்காயை துருவியோ அல்லது நறுக்கியோ எடுத்து வைத்து கொள்ளவும்.எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்து விதைகளை நீக்கி வைக்கவும்.இப்போது மிக்ஸி ஜாரில் நறுக்கிய பீட்ரூட், புதினா, கொத்தமல்லி இலைகள், பூண்டு, இஞ்சி, மற்றும் தேங்காய் சேர்க்கவும்.அதனுடன் பச்சை மிளகாயை சிறிய துண்டுகளாக உடைத்து சேர்க்கவும்.பின் அதில் சீரகம் மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும். கடைசியாக அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.இப்போது வாணலியை அடுப்பில் வைத்து சூடானது எண்ணெய் சேர்க்கவும்.எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிய விடவும்.பின் அதில் பச்சை கருவேப்பிலை சேர்க்கவும்.அதனுடன் உளுந்து மற்றும் கடலைப்பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.கடைசியாக பெருங்காயம் சேர்த்து, சட்டினி உடன் சேர்த்தால் சுவையான பீட்ரூட் சட்னி ரெடி!

The post பீட்ரூட் சட்னி appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED Test Post