×
Saravana Stores

அரிசி ஏற்றுமதி கட்டுப்பாட்டை நீக்கிய ஒன்றிய அரசு

புதுடெல்லி: பாசுமதி அல்லாத அரிசி வகைகளுக்கு கடந்தாண்டு ஜூலை மாதம் ஒன்றிய அரசு தடை விதித்தது. இதை கடந்த மாதம் 28ம் தேதி நீக்கிய ஒன்றிய அரசு, அரிசிக்கான ஏற்றுமதி வரியையும் ரத்து செய்தது. அதேநேரத்தில் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை நிர்ணயித்தது.

அதாவது டன் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையாக 490 டாலர் (சுமார் ரூ.41,200) நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த குறைந்தபட்ச ஏற்றுமதி விலை கட்டுப்பாட்டை ஒன்றிய அரசு நீக்கியுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

அரிசி ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக ஒன்றிய நிதித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வருவாய் துறை வெளியிட்ட அறிவிக்கையில், ‘பாசுமதி அல்லாத அரிசி (பச்சரிசி) வகைகளுக்கு ஏற்றுமதி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதுபோல, நெல் உள்ளிட்ட புழுங்கல் அரிசி மீதான ஏற்றுமதி வரி 20 சதவீதமாக விதிக்கப்பட்ட நிலையில், தற்போது 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரி குறைப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அரிசி ஏற்றுமதி கட்டுப்பாட்டை நீக்கிய ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Tags : Union Govt ,New Delhi ,Union government ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசு அறிவிப்பு சீன லைட்டர்...