×
Saravana Stores

பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பால வரைபடத்திற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி!

தென்காசி: தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பாலம் வரைபடத்துக்கு ஒன்றிய அரசு அமைச்சகம் ஒப்புதல் அளித்திருக்கும் நிலையில், பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார். நெல்லை – தென்காசி இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வரக்கூடிய நிலையில், போக்குவரத்து நெரிசலை மேலும் குறைப்பதற்காக பாவூர்சத்திரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுகிறது. 900 மீட்டர் நிலம், 20 மீட்டர் அகலத்தில் பாலம் பணிகள் தொடங்கி 3 ஆண்டுகள் ஆகிறது.

ஆனால் தண்டவாளத்திற்கு மேலே பாலம் குறித்த வரைபடத்துக்கு ரயில்வேயின் அனுமதியை பெற நெடுஞ்சாலை துறை தவம் கிடந்துள்ளது. இது தொடர்பான செய்தி வெளியான நிலையில், அதற்க்கு தற்பொழுது அனுமதி கிடைத்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பாலம் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் நெல்லை – தென்காசி இடையே பயண நேரம் 20 நிமிடங்கள் வரை குறையும் என்றும் போக்குவரத்து நெரிசல் இருக்காது என்றும் அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளார்.

 

The post பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பால வரைபடத்திற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி! appeared first on Dinakaran.

Tags : Tenkasi ,union government ministry ,Bhavoorchatram ,Nellai ,
× RELATED தென்காசியில் கரடி தாக்கியதில் பெண் காயம்