×
Saravana Stores

ஒன்றிய அமைச்சர் அமித் ஷா கடினமாக உழைக்கும் தலைவர்: பிறந்த நாளில் பிரதமர் மோடி புகழாரம்

புதுடெல்லி: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தனது 60வது பிறந்த நாளை கொண்டாடினார். இதனையொட்டி பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் பாஜ உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், ‘‘அவர் ஒரு கடினமாக உழைக்கும் தலைவர். பாஜவை வலுப்படுத்துவதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.

அவர் விதிவிலக்கான நிர்வாகியாக முத்திரை பதித்துள்ளார்” என்றார். இதேபோல் பாஜ தலைவர் ஜேபி நட்டா,‘‘முன்னாள் தலைவர் அமித் ஷாவின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் திறன்கள் உள்ளிட்டவை என்னை ஊக்குவித்த ஆதாரங்கள். நாட்டின் உள்பாதுகாப்புக்கு ஷாவின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு மறக்க முடியாதது” என்று குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமித் ஷாவின் இந்தியா மற்றும் பாஜவின் வளர்ச்சியில் அவரது பங்கு பாராட்டுக்குரியது என்று தெரிவித்துள்ளார். இதேபோல் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஜேடி(யூ) தலைவர் லாலன் சிங், எல்ஜேபி(ஆர்) தலைவர் சிராக் பஸ்வான் உள்ளிட்டோரும் உள்துறை அமைச்சருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

The post ஒன்றிய அமைச்சர் அமித் ஷா கடினமாக உழைக்கும் தலைவர்: பிறந்த நாளில் பிரதமர் மோடி புகழாரம் appeared first on Dinakaran.

Tags : Union minister ,Amit Shah ,PM Modi ,New Delhi ,Union Home Minister ,Modi ,BJP ,Prime Minister… ,
× RELATED மும்பையில் ரத்தன் டாடாவின் உடலுக்கு...