×
Saravana Stores

டாணா புயல் எச்சரிக்கை காரணமாக 28 ரயில் சேவைகளை ரத்து செய்தது தெற்கு ரயில்வே

சென்னை: டாணா புயல் எச்சரிக்கை காரணமாக 28 ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே ரத்து செய்தது. நாளை, அக்.24, 25 தேதிகளில் இயக்கப்படவிருந்த பல்வேறு ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்து உள்ளது.

* பெங்களூரு யஷ்வந்த்பூரில் இருந்து நாளை காலை ஹவுரா புறப்பட வேண்டிய ரயில் ரத்து

* நாளை மறுநாள் நள்ளிரவு 1 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு ஷாலிமார் செல்ல வேண்டிய விரைவு ரயில் ரத்து

* நாளை அதிகாலை நெல்லையில் இருந்து புறப்பட்டு புருளியா செல்ல வேண்டிய அதிவிரைவு ரயில் ரத்து

* நாளை நண்பகல் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு சந்திராகச்சி செல்லும் சிறப்பு ரயில் ரத்து

* நாளை மறுநாள் காரக்பூரில் இருந்து விழுப்புரம் வரும் அதிவிரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

* நாளை மறுநாள் ஷாலிமாரில் இருந்து சென்ட்ரல் வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரத்து

* நாளை மறுநாள் திருச்சியில் இருந்து ஹவுரா செல்லும் அதிவிரைவு ரயில் ரத்து

* திப்ரூகரில் இருந்து நாளை புறப்பட்டு கன்னியாகுமரிக்கு வர வேண்டிய ரயில் ரத்து

* கன்னியாகுமரியில் இருந்து நாளை மாலை புறப்பட்டு திப்ரூகர் செல்ல -வேண்டிய விவேக் எக்ஸ்பிரஸ் ரத்து

* நாளை மறுநாள் காரக்பூரில் இருந்து விழுப்புரம் வரும் அதிவிரைவு ரயில் ரத்து ரயில்வே

* நாளை மறுநாள் ஷாலிமாரில் இருந்து சென்ட்ரல் வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது

* நாளை மறுநாள் காலை சென்னையில் இருந்து ஹவுரா செல்ல வேண்டிய கோரமண்டல் விரைவு ரயில் ரத்து

* நாளை மறுநாள் காலை சென்னையில் இருந்து சந்திராகச்சி செல்ல வேண்டிய விரைவு ரயில் ரத்து

* தாம்பரத்தில் இருந்து நாளை பிற்பகல் புறப்பட்டு சந்திராகச்சி செல்ல வேண்டிய சிறப்பு ரயில் ரத்து

* 24-ம் தேதி காரக்பூரிலிருந்து பிற்பகல் 2.05க்கு விழுப்புரம் புறப்படும் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது

* 24-ம் தேதி ஷாலிமரிலிருந்து பிற்பகல் 3.20 மணிக்கு புறப்பட்டு சென்னை வரும் ரயில் ரத்து

* 24-ம் தேதி ஹவுராவிலிருந்து மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு திருச்சி வரும் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

The post டாணா புயல் எச்சரிக்கை காரணமாக 28 ரயில் சேவைகளை ரத்து செய்தது தெற்கு ரயில்வே appeared first on Dinakaran.

Tags : Southern Railway ,Dana ,Chennai ,Yashwanpur, Bangalore ,Dinakaran ,
× RELATED ரயில் விபத்து குறித்து முழுமையான...