×
Saravana Stores

கோவை கார் வெடிப்பு வழக்கில் மேலும் 3 பேரை கைது செய்தது தேசிய புலனாய்வு முகமை

கோவை: கோவை கார் வெடிப்பு வழக்கில் மேலும் 3 பேரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்தது. கோவை உக்கடம் கோட்டைமேட்டில் சங்கமேஸ்வரர் கோயில் அருகே கடந்த 2022ம் ஆண்டு காரில் குண்டு வெடித்தது. இதில், கோட்டை மேடு பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் (27) என்பவர் உடல் சிதறி உயிரிழந்தார். இதுகுறித்து உக்கடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில், ஜமேஷா முபின் கோவையில் குண்டு வைக்க சதி திட்டம் தீட்டியது தெரியவந்தது. இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றம் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், முகமது நவாஸ் இஸ்மாயில், பெரோஸ் இஸ்மாயில், அப்சர்கான், உமர்பாரூக், முகமது தவ்பிக் முகமது இத்ரீஸ் உள்பட 14 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கோவை கார் வெடிப்பு வழக்கில் மேலும் 3 பேரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்தது.

கோவை கார் வெடிப்பு வழக்கில் பவாஸ் ரஹ்மான், அபு ஹனிபா, சரண் மாரியப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை கார் வெடிப்பு சம்பவத்துக்கு நிதி உதவி செய்த புகாரில் 3 பேரையும் என்.ஐ.ஏ. கைது செய்தது. கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து 3 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

The post கோவை கார் வெடிப்பு வழக்கில் மேலும் 3 பேரை கைது செய்தது தேசிய புலனாய்வு முகமை appeared first on Dinakaran.

Tags : National Intelligence Agency ,Goa. ,Goa ,Sangameshwarar Temple ,Gowai Ukadam Kottimate ,
× RELATED விமானங்களுக்கு தொடர் வெடிகுண்டு...