×
Saravana Stores

மாணவிகள், இளம்பெண்கள் மீது மோதுவது போல் ஓட்டுகிறார்: பெண் வேடத்தில் சொகுசு பைக்கில் வலம் வரும் வாலிபர்


வேலூர்: வேலூரில் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சொகுசு பைக்கை பெண் வேடத்தில் வாலிபர் ஒருவர் வேகமாக ஓட்டி வருகிறார். அந்த வாலிபர் பெண்கள் போன்று நீண்ட தலைமுடி வைத்துள்ளார். அதில் மல்லிகை பூவை சூடியுள்ளார். சேலை ஜாக்கெட், கழுத்தில் நெக்லஸ் போன்ற நகை அணிந்துள்ளார். அவர் சொகுசு பைக்கை கல்லூரி மாணவிகள் வரும் போது வேகமாகவும், அவர்கள் மீது மோதுவது போலவும் ஓட்டிச்செல்கிறார். இதேபோல் இளம்பெண்கள் மீது மோதுவது போலவும் செல்கிறார். மேலும் அந்த பைக்கில் பதிவு எண்ணும் இல்லை. இவரது பைக் சாகசத்தை கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் வேடிக்கை பார்ப்பது போன்றும் வீடியோவில் பதிவாகியுள்ளது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை அதிகம் பேர் பார்த்து அதிக லைக்ஸ் வாங்கும் வகையில் அவர் செயல்பட்டு வருகிறார்.

எனவே அந்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிலையில், சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து அவர் யார் என விசாரித்து வருகின்றனர். அதில் அந்த வாலிபர் முன்னெச்சரிக்கையாக தனது பைக்கின் நம்பர் பிளேட்டை கழற்றி விட்டே அதை ஓட்டிச் செல்கிறார். அதேநேரத்தில் அவரது முகம் தெளிவாக தெரிவதால் அவர் பழைய குற்றவாளியாக இருக்கலாம் என்ற நோக்கில் போலீசார், பைக் செல்லும் இடங்களில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

The post மாணவிகள், இளம்பெண்கள் மீது மோதுவது போல் ஓட்டுகிறார்: பெண் வேடத்தில் சொகுசு பைக்கில் வலம் வரும் வாலிபர் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Mallikai Poo ,
× RELATED வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை...