×

அனைத்து போக்குவரத்து கழகங்களில் 3 மாதங்களில் மின்னணு டிக்கெட் இயந்திரம்

சென்னை: தமிழகத்தில் அரசு விரவு போக்குவரத்துக் கழகம், மாநகர போக்குவரத்துக் கழகம் மற்றும் விழுப்புரம், சேலம், கோவை, கும்பக்கோணம், நெல்லை, மதுரை போக்குவரத்து கழகங்கள் என 8 அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதில் மாநகர போக்குவரத்து கழகம் சென்னை மாநகரில் மட்டும் பேருந்துகளை இயக்குகிறது, மற்ற போக்குவரத்து கழகங்கள் அந்தந்த மண்டலங்களிலும் வெளியூர்களுக்கும் பேருந்துகளை இயக்குகிறது. அரசு விரைவு போக்குவரத்து கழகம் நீண்ட தூர பயணத்திற்காக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்கள், வர்த்தக இடங்கள், வழிபாட்டு மற்றும் சுற்றுலா தலங்களுக்கும், அண்டை மாநிலங்களான புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கும் பேருந்துகளை இயக்கி வருகிறது.

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 22 பணிமனைகளில் மொத்தம் 1,078 பேருந்துகள் உள்ளன. அண்டை மாநிலங்களை இணைக்கும் விதமாக 251 வழித்தடங்களிலும், தமிழ்நாட்டில் 139 வழித்தடங்களிலும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 2010-11 முதல் மின்னணு பயணச்சீட்டு சாதனங்கள் வாயிலாக பயணச்சீட்டுகள் வழங்கும் முறை அமல்படுத்தப்பட்டது. முதலில் நகர பேருந்துகளில் இந்த சாதனம் பயன்படுத்தப்பட்டது, தொடர்ச்சியாக புறநகர் பேருந்துகள் மற்றும் தொலைதூர பேருந்துகளில் பயன்படுத்தப்பட்டது. தற்போது பெரும்பாலும் பலர் கையில் பணம் வைத்திருக்காமல் மொபல் போன்களில் யுபிஐ வசதியை பயன்படுத்தி வருகின்றனர். இதனையடுத்து டிக்கெட் விநியோகம் செய்ய யுபிஐ மூலம் பணம் பெறும் வசதியை மாநகர் போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்தது.

அரசு பேருந்துகளில் யுபிஐ, டெபிட், கிரெடிட் கார்ட் மூலம் பணம் பெற்று டிக்கெட் வழங்கும் வசதியை அறிமுகப்படுத்த கடந்த 2023ம் ஆண்டு முதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து எஸ்பிஐ வங்கியிடம் இயந்திரங்களை பெற ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அரசு போக்குவரத்து கழகம் மற்றும் மாநகர் போக்குவரத்து கழகத்தில் மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் பயணச்சீட்டுகள் வழங்கும் முறை 100சதவீதம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, விழுப்புரம் மற்றும் கும்பகோணம் போக்குவரத்துக் கழகங்களில் தற்போது மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், மற்ற போக்குவரத்துக் கழகங்களில் இந்த நடைமுறை விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 3 மாதங்களில் அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் மின்னணு டிக்கெட் இயந்திரம் பயன்பட்டிற்கு வரும் என்றும் சென்னையில் மாநகர பேருந்துகளில் தேசிய பொது இயக்க அட்டையை பயன்படுத்தி டிக்கெட் பெறும் வசதி விரைவில் அறிமுகப்படுதப்படவுள்ளதாக போக்குவரத்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளார்.

The post அனைத்து போக்குவரத்து கழகங்களில் 3 மாதங்களில் மின்னணு டிக்கெட் இயந்திரம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Government Virava Transport Corporation ,Municipal Transport Corporation ,8 Government Transport Corporations ,Viluppuram ,Salem ,Goa ,Kumbakonam ,Nella ,Madurai Transport Corporation ,Dinakaran ,
× RELATED தலைமைச் செயலகத்திற்கு வரக்கூடிய...