×

தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி: மக்கள் அதிர்ச்சி!

புதுச்சேரி: புதுச்சேரியில் நீதிமன்ற உத்தரவுப்படி தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7மணி வரையும், மாலை 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.

அதேவேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறு குழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

இதனை தடுக்கும் வகையில் புதுச்சேரியில் தீபாவளி அன்று, காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். அமைதியான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள், வழிப்பாட்டு தலங்கள், கல்வி கூடங்கள், நீதிமன்ற சுற்றுவட்டாரங்களில் 100 மீட்டருக்குள் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி, புதுச்சேரி சுற்றுச்சூழல் துறை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு குழுமம் அறிவித்துள்ளது.

 

The post தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி: மக்கள் அதிர்ச்சி! appeared first on Dinakaran.

Tags : Diwali ,Puducherry ,
× RELATED அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர்...