×

திருவெறும்பூரில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம்

 

திருவெறும்பூர், அக். 16: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு செயல்பாடுகளில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. மேலும் பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் தீயணைப்பு நிலையம் சார்பில் முதல் நிலை மீட்பு பணியாளர்களுக்கான பயிற்சி கூட்டமானது திருவெறும்பூரில் நடைபெற்றது.திருவெறும்பூர் தாசில்தார் ஜெயபிரகாசம் மேற்பார்வையில், திருவெறும்பூர் தீயணைப்பு நிலையத்தின் சிறப்பு நிலைய அலுவலர் சகாய பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்ற பயிற்சிக் கூட்டத்தில் திருவெறும்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 220 முதல் நிலை மீட்பு பணியாளர்களுக்கு பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்படுவது, விபத்து சிக்கியவர்களை எப்படி மீட்பது உள்ளிட்ட பேரிடர் மேலாண்மை தொடர்பான செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.இதில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள், வருவாய்த் துறையினர், கிராம நிர்வாக அலுவலர்கள், தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திருவெறும்பூரில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Tags : Tiruverumpur ,North East ,Thiruverumpur ,Monsoon ,Tamil Nadu ,Tamil Nadu Government ,
× RELATED திருவெறும்பூர் அருகே தனியார் கம்பெனியில் இரும்பு திருடியவர் கைது