×

சுங்கச்சாவடியில் வெள்ளநீர் புகுந்தது

 

புழல், அக். 16: சென்னையில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்ல கூடிய முக்கிய சாலைகளில் ஒன்று சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை. சென்னை, செங்குன்றம், தச்சூர், கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக ஆந்திராவிற்கு செல்லும் சாலை இது. இந்த சாலையை புணரமைத்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுவதற்காக இந்த சாலை வழியாக பயணம் செய்யும் வாகனங்களிடம் செங்குன்றம் அடுத்த நல்லூர் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று சுங்கக் கட்டணம் வசூலிக்கிறது.

இந்நிலையில், நேற்று காலை முதல் செங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டி வரும் கனமழையால் சுங்கச்சாவடியில் மழை நீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாததால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 7 கவுன்டர்கள் உள்ள நிலையில் வாகனங்கள் செல்லும் 5 கவுன்டர்கள் முழுவதும் சுமார் 2 அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளதால் அந்த வழித்தடங்களில் வாகனங்கள் செல்லவில்லை. 7 கவுன்டர்கள் வழியே வாகனங்கள் செல்வதற்கு பதிலாக 2கவுன்டர்கள் வழியாக மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இதனால் வாகனங்கள் மெல்ல ஊர்ந்து சென்று வருகிறது.

The post சுங்கச்சாவடியில் வெள்ளநீர் புகுந்தது appeared first on Dinakaran.

Tags : Puzhal ,Chennai ,Chennai – Kolkata National Highway ,Andhra ,Sengunram ,Thachur ,Kummidipoondi ,Arambakkam ,
× RELATED செடிகொடிகள் வளர்ந்து விஷப் பூச்சிகள்...