×

விதிமீறி இயக்கிய 46 ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு அபராதம் வேலூர் வட்டார போக்குவரத்து துறை அதிரடி தொடர் விடுமுறையையொட்டி நேற்று காலை வரை சோதனை

வேலூர், அக்.15: ஆயுதபூஜை மற்றும் தொடர் விடுமுறை எதிரொலியாக நேற்று காலை வரை நடந்த சிறப்பு சோதனையில், விதிமீறி இயக்கிய 46 ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு ₹1.32 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் கடந்த 11ம் தேதி ஆயுதபூஜையும், 12ம் தேதி விஜயதசமியும் கொண்டாடப்பட்டது. இவ்விழாவை தொடர்ந்து நேற்று முன்தினம் ஞாயிறு விடுமுறை என்பதால் 3 நாட்கள் தொடர் விடுமுறையை கொண்டாட பலர் சொந்த ஊருக்கு சென்று திரும்பி வந்தனர். பண்டிகை காலத்தை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார போக்குவரத்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதையடுத்து கடந்த 10ம் தேதி இரவு முதல் நேற்று காலை வரை கூடுதல் கட்டணம் வசூல் தொடர்பாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அதன்படி, வேலூர் துணை போக்குவரத்து மண்டல ஆணையர் பட்டப்பசாமி மேற்பார்வையில், வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம் தலைமையில், பள்ளிகொண்டா டோல்கேட்டில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம்(வேலூர்), ராஜேஷ்கண்ணன்(குடியாத்தம்), சிவக்குமார்(ராணிப்பேட்டை) செங்குட்டுவேல்(அரக்கோணம்) ஆகியோர் கொண்ட குழுவினர் கடந்த 10ம் தேதி தொடங்கி நேற்று காலை வரை நடத்திய சோதனையில் பிற மாநில வாகனங்கள் சாலை வரி செலுத்தாமல் இயக்குவது தெரியவந்தது. 4 நாட்களாக நடந்த சோதனையில், 94 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு, அதில் 46 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு, ₹1 லட்சத்து 32 ஆயிரத்து 500 அபராதமாக விதிக்கப்பட்டதாக வேலூர் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post விதிமீறி இயக்கிய 46 ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு அபராதம் வேலூர் வட்டார போக்குவரத்து துறை அதிரடி தொடர் விடுமுறையையொட்டி நேற்று காலை வரை சோதனை appeared first on Dinakaran.

Tags : Vellore regional transport department ,Vellore ,Ayudha Puja ,Tamil Nadu ,
× RELATED ஆயுத பூஜை, தொடர் விடுமுறையை முன்னிட்டு...