×

அம்மன் கோயிலில் நவராத்திரி விழா நிறைவு

 

நாமக்கல், அக். 14: நாமக்கல்லை அடுத்த செல்லப்பம்பட்டியில், சுயம்பு மகா மாரியம்மன் கோயிலில், நவராத்திரி விழா 9 நாட்கள் நடைபெற்றது. 9 படிகள் அமைக்கப்பட்டு, கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு தினமும் பூஜைகள் நடத்தப்பட்டது. நவராத்திரியின் இறுதி நாளான நேற்று, சரஸ்வதி பூஜையையொட்டி, சுவாமி பிரம்மச்சாரணி சரஸ்வதி அம்மன் அலங்காரத்தில் எழுந்தருளினார். விழாவையொட்டி, துர்கா லட்சுமி சரஸ்வதி ஹோமம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவபடிப்பில் சேர்ந்துள்ள நாமக்கல் அரசு ஆண்கள் தெற்குமேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவர் இளவரசனுக்கு ₹10 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

மேலும், அரசு பள்ளியில் படித்து வரும் மாணவ, மாணவிகள் பொம்மைக்குட்டைமேடு கோபிகா, மேற்கு பாலப்பட்டி சபரி மனோகரன், செல்லப்பம்பட்டி லோகேஸ்வரன், நந்தகுமார், லோகேஸ்வரன் ஆகியோருக்கு தலா ₹5 ஆயிரம் வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. கல்வி உதவித்தொகையை, அமெரிக்காவில் வசிக்கும் நாமக்கல் என்ஜினியர் சந்திரசேகர், சென்னை டாக்டர் தன்ராஜ், சவுதி அரேபியாவில் வசிக்கும் செல்லப்பம்பட்டி இன்ஜினியர் குமார் ஆகியோர் வழங்கினர். அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் குழந்தைகளுக்கும் நோட்டு புத்தகம், பேனா, பென்சில் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், தொழிலதிபர்கள் தாளமுத்து, குணசேகரன், மணிவேல், மகா மாரியம்மன் வார வழிபாட்டு மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ஜெகதீசன், ஆசிரியை சுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post அம்மன் கோயிலில் நவராத்திரி விழா நிறைவு appeared first on Dinakaran.

Tags : Navratri Ceremony ,Amman Temple ,NAMAKKAL ,Navratri ,Suyambu Maha Mariamman Temple ,Namakkala ,Selapambatti ,Saraswati ,
× RELATED காஞ்சி அம்மன் கோயிலில் பால்குடம்: ஏராளமான பெண்கள் பங்கேற்பு