×

திருப்பூரில் சாலை மறியலில் ஈடுபட்ட 25 பேர் கைது

 

திருப்பூர், அக்.11: காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பன்னாட்டு நிறுவனத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர்கள் தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியும் இன்னும் போராட்டம் முடிவுக்கு வராத நிலையில், தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பன்னாட்டு நிறுவனம் முன் வரவேண்டும்.
போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்களை கைது செய்யும் நடவடிக்கையை காவல்துறையினர் கைவிட வேண்டும். தொழிற்சங்க உரிமைகளை பறிக்கும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் 60 அடி சாலையில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தின் கிளை அலுவலகம் முன்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் அருள், மாவட்ட செயலாளர் மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பன்னாட்டு நிறுவனத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு சாலை மறியலில் ஈடுபட்ட வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த 25 பேரை போலீசார் கைது செய்தனர்.

 

The post திருப்பூரில் சாலை மறியலில் ஈடுபட்ட 25 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Kanchipuram ,
× RELATED திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து..!!