×
Saravana Stores

2 கைதிகளுக்கு சிகிச்சை

சேலம், அக்.11: சேலம் அஸ்தம்பட்டி மேற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் தீபக் (எ) ராம்தீபக் (33). இவர் சேலம் மத்திய சிறையில், கடந்த 2021ம் ஆண்டு முதல் தண்டனை கைதியாக இருந்து வருகிறார். கடந்த 8ம் தேதி தீபக்கிற்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சிறை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதேபோல், சேலம் மாவட்டம் இடைப்பாடி ஆலச்சாம்பாளையம் வடக்குதெருவைச் சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (42). இவர் கடந்த மார்ச் மாதம் முதல், சேலம் மத்திய சிறையில் தண்டணை கைதியாக இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 8ம்தேதி சவுந்தர்ராஜனுக்கு திடீரென மூச்சுத்தினறல் ஏற்பட்டது. தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக, அவரை சிறை அதிகாரிகள் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது போலீஸ் பாதுகாப்புடன், இரண்டு கைதிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post 2 கைதிகளுக்கு சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Salem ,Deepak (A) Ramdeepak ,Salem Astampatty West Street ,Salem Central Jail ,Deepak ,Dinakaran ,
× RELATED சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தனியார் பேருந்து தீ பிடித்து எரிந்தது!