×

வரி வருவாயில் மாநில அரசுகளுக்கான வரி பகிர்வு உ.பிக்கு ரூ.31,962 கோடி தமிழகத்துக்கு ரூ.7,268 கோடி: நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு ஓரவஞ்சனை

புதுடெல்லி: வரி வருவாயில் இருந்து மாநில அரசுகளுக்கான வரி பகிர்வாக ரூ.1,78,173 கோடியை விடுவித்து ஒன்றிய அரசு நேற்று அறிவித்தது. இதில் தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச தொகையும், பாஜ ஆளும் உத்தரபிரதேசத்துக்கு அதிக தொகையும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒன்றிய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு உள்பட 28 மாநிலங்களுக்கு நிதி பகிர்வாக ரூ.1,78,173 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் 2024 அக்டோபர் மாதத்தில் விடுவிக்கப்பட வேண்டிய வழக்கமான முன்கூட்டிய தொகையும் தவணையும் அடங்கும். வரும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டும், மாநிலங்கள் மூலதனச் செலவினங்களை விரைவுப்படுத்தவும், மாநிலங்களின் வளர்ச்சி, நிதி திட்டங்களின் செலவினங்களுக்கு நிதியளிக்கவும் ஏற்ற வகையில் இந்த வரி பகிர்வு விடுவிக்கப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்துக்கு ரூ.31,962 கோடியும், பீகாருக்கு ரூ.17,921 கோடியும், மேற்கு வங்கத்துக்கு ரூ.13,404 கோடியும், மகாராஷ்டிராவுக்கு ரூ.11,255 கோடி ,ராஜஸ்தான் மாநிலத்துக்கு ரூ.10,737 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தென்மாநிலங்களுக்கு குறைந்தபட்ச தொகையே விடுவிக்கப்பட்டுள்ளது அதன்படி தமிழ்நாட்டுக்கு ரூ.7,268 கோடியும், அதற்கு அடுத்தபடியாக ஆந்திரபிரதேசத்துக்கு ரூ.7,211 கோடி, கர்நாடகாவுக்கு ரூ.6,498 கோடி, தெலங்கானாவுக்கு ரூ.3,745 கோடி மற்றும் கேரளாவுக்கு ரூ.3,430 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

 

The post வரி வருவாயில் மாநில அரசுகளுக்கான வரி பகிர்வு உ.பிக்கு ரூ.31,962 கோடி தமிழகத்துக்கு ரூ.7,268 கோடி: நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு ஓரவஞ்சனை appeared first on Dinakaran.

Tags : UP ,Tamil Nadu ,Union government ,New Delhi ,BJP ,Uttar Pradesh ,Union Finance Ministry ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசை கண்டித்து தமிழகம்...